Tamil

தாய் சேய் நலம் : கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய 6 சத்தான பழங்கள்

Tamil

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்:

கர்ப்ப காலத்தில் தாய் உண்ணும் உணவே குழந்தையின் வளர்ச்சிக்கு அடிப்படை. தினமும் பழங்களைச் சாப்பிடுவது தாய்க்கும் சேய்க்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், சுகப்பிரசவத்தையும் அளிக்கும்.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு :

ஆரஞ்சில் சி-வைட்டமின், நீர்ச்சத்து அதிகம். இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி, கர்ப்பகால நீர் இழப்பைத் தடுக்கும். இதிலுள்ள ஃபோலேட் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

Image credits: Getty
Tamil

ஆப்பிள் :

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, தாயின் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

வாழைப்பழங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் கர்ப்பகால கால் பிடிப்பைத் தடுக்கும். இது உடனடி ஆற்றல் தருவதுடன், காலைச் சோர்வு மற்றும் குமட்டலை (Morning Sickness) குறைக்க பெரிதும் உதவும்.

Image credits: Getty
Tamil

மாதுளை :

மாதுளையில் இரும்புச்சத்து, கால்சியம் அதிகம். இது கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கும். எலும்பு வலிமைக்கும், குழந்தையின் இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகச்சிறந்த பழமாகும்.

Image credits: Getty
Tamil

கொய்யாப்பழம் :

கொய்யாவில் வைட்டமின் C, E மற்றும் மெக்னீசியம் உள்ளன. இது செரிமானம், ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

Image credits: Getty
Tamil

தர்பூசணி :

தர்பூசணி உடலை குளிர்ச்சியாகவும் நீர்ச்சத்தோடும் வைக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கை, கால் வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சலை இது குறைக்கும். இதில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது.

Image credits: Getty

Soup Recipes: குழந்தைகளுக்கு ஏற்ற 5 சத்தான மற்றும் சுவையான சூப் வகைகள்

ஆரோக்கியமான இதயத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஒரு எளிய வழிகாட்டி

அதிக புரதம் ஆபத்தா? அளவுக்கு மீறிய புரோட்டீனால் ஏற்படும் பக்கவிளைவுகள்

ஆப்ரிகாட் பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்!