அதிக புரதம் ஆபத்தா? அளவுக்கு மீறிய புரோட்டீனால் ஏற்படும் பக்கவிளைவுகள்
health-food Apr 21 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
சிறுநீரக பாதிப்பு :
சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும். அதிக புரதம் சாப்பிட்டால் அவற்றுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும். இது நாளடைவில் சிறுநீரகக் கற்கள் மற்றும் பாதிப்புகளை உண்டாக்கும்.
Image credits: Getty
Tamil
நீர்ச்சத்து குறைபாடு :
அதிக புரதம் செரிக்க உடல் அதிக நீரை பயன்படுத்தும். இதனால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க, புரத உணவுகளை உட்கொள்பவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
Image credits: Getty
Tamil
உடல் எடை அதிகரிப்பு :
புரதம் எடையைக் குறைக்க உதவும் என்பார்கள். ஆனால் தேவைக்கு மேல் அதிக புரதம் உட்கொண்டால், அது உடலில் கொழுப்பாக மாறி சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
Image credits: Getty
Tamil
செரிமானப் பிரச்சினைகள்:
அதிக புரதம் கொண்ட உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
இதய நோய்க்கான வாய்ப்பு :
அதிக சிவப்பு இறைச்சி, கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடுவது கொலஸ்ட்ராலை உயர்த்தி இதய நோய் அபாயத்தை உண்டாக்கும். எனவே புரதத்திற்காக இவற்றை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.