Tamil

Gut Health:குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் ஓர் எளிய வழிகாட்டி

Tamil

ஆரோக்கியமான குடல் :

நல்ல ஆரோக்கியத்திற்கு குடல் நலமே அடிப்படை. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, சத்தான இயற்கை உணவுகளை உண்டு நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவோம்! ஆரோக்கியமே செல்வம்.

Image credits: Getty
Tamil

தயிர்:

தயிரில் உள்ள 'புரோபயாட்டிக்' நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல் தொற்றுகளைத் தடுக்கின்றன. தினமும் ஒரு கிண்ணம் தயிர் உண்பது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

முழு தானியங்கள் :

தினை, கம்பு போன்ற முழு தானியங்களில் நார்சத்து அதிகம். மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தைச் சீராக்கும். மைதாவைத் தவிர்த்து முழு தானியங்களை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: Getty
Tamil

பருப்பு மற்றும் பயறு வகைகள் :

பருப்பு வகைகளில் புரதச்சத்துடன் செரிமானத்திற்குத் தேவையான அமினோ அமிலங்களும் உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

Image credits: Getty
Tamil

காய்கறிகள் :

பச்சை இலை காய்கறிகள், கேரட், பீட்ரூட் போன்ற பல்வேறு வண்ணக் காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை குடல் வீக்கத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல் நலனைப் பாதுகாக்கின்றன.

Image credits: Getty
Tamil

பழங்கள் :

பழங்களிலுள்ள சர்க்கரை, நீர்ச்சத்து குடலைச் சுத்தமாக்கும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்கள் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

Image credits: Getty

தாய் சேய் நலம் : கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய 6 சத்தான பழங்கள்

Soup Recipes: குழந்தைகளுக்கு ஏற்ற 5 சத்தான மற்றும் சுவையான சூப் வகைகள்

ஆரோக்கியமான இதயத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஒரு எளிய வழிகாட்டி

அதிக புரதம் ஆபத்தா? அளவுக்கு மீறிய புரோட்டீனால் ஏற்படும் பக்கவிளைவுகள்