MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Maravalli kizhangu payasam: மரவள்ளிக்கிழங்கில் பாயாசமா? வித்தியாசமான சுவைக்கு இந்த புதுவகை ரெசிப்பி

Maravalli kizhangu payasam: மரவள்ளிக்கிழங்கில் பாயாசமா? வித்தியாசமான சுவைக்கு இந்த புதுவகை ரெசிப்பி

Maravalli kizhangu payasam: மரவள்ளிக்கிழங்கை வைத்து சுவையான பாயாசம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், பால், தேங்காய்ப்பால், வெல்லம் சேர்த்து செய்யும் எளிய செய்முறை மற்றும் சுவை அதிகரிககும் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 25 2026, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மரவள்ளிக்கிழங்கு பாயாசம்
Image Credit : pinterest

மரவள்ளிக்கிழங்கு பாயாசம்

மரவள்ளிக்கிழங்கு வைத்து பாயாசமா? என்று கேட்கும் அளவுக்கு இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பிதான். ஆனால் ஒருமுறை செய்து பார்த்தால், அதன் மென்மையான பதமும், தேங்காய்ப்பாலும், ஏலக்காய் மணமும் சேர்ந்து தரும் சுவை நிச்சயம் பிடித்துப் போகும். வீட்டில் கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கை வைத்து, வழக்கமான பாயாசத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதுவகை இனிப்பு ரெசிப்பி செய்ய விரும்பினால் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

  • மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம்
  • பால் - 2 கப்
  • தேங்காய்ப்பால் -1 கப்
  • வெல்லம் - 3\4 முதல் 1 கப்
  • ஏலக்காய் - 3
  • முந்திரி - 10
  • திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 2 டீஸ்பூன்
  • சுக்கு பொடி - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
  • உப்பு - ஒரு சிறிய சிட்டிகை
  • தண்ணீர் - தேவையான அளவு
35
மரவள்ளிக்கிழங்கை தயார் செய்வது எப்படி?
Image Credit : pinterest

மரவள்ளிக்கிழங்கை தயார் செய்வது எப்படி?

முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை முழுமையாக நீக்கி, தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவும். கிழங்கு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடுங்கள். தொடர்ந்து, வெந்த மரவள்ளிக்கிழங்கை லேசாக மசித்துக் கொள்ளலாம். நடுவில் கடினமான நார்ப்பகுதி இருந்தால் அதை மட்டும் நீக்கிவிடுங்கள்.

45
பாயாசம் செய்வது எப்படி?
Image Credit : pinterest

பாயாசம் செய்வது எப்படி?

  • முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் முழுமையாகக் கரைந்ததும் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் பாத்திரத்தில் வேகவைத்து மசித்த மரவள்ளிக்கிழங்கை சேர்த்து, அதனுடன் 1\2 கப் பால் ஊற்றி மிதமான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டே சமைக்கவும்.
  • கிழங்கு மென்மையாகி பாலுடன் நன்றாகக் கலந்ததும், மீதமுள்ள பாலை சேர்த்து மேலும் 5 - 7 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்க வேண்டும். பால் அடிப்பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறுவது அவசியம்.
  • கிழங்கு நன்றாக வெந்து பால் கலவை சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அடுப்பை குறைந்த தீயில் வைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்க்கவும்.
  • வெல்லம் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்கவிடாமல், 2–3 நிமிடங்கள் நன்றாகக் கிளறினால் போதும். இவ்வாறு பால், மரவள்ளிக்கிழங்கு மற்றும் வெல்லம் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்து, மணமும் சுவையும் நிறைந்த இனிப்பு பதத்துக்கு வரும்.
  • இப்போது தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
55
சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயாசம் தயார்
Image Credit : pinterest

சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயாசம் தயார்

  • தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு அதிகமாக கொதிக்க விடாமல், ஒரு முறை நுரை வரத் தொடங்கும் முன் அடுப்பை அணைத்துவிடவும்.
  • அடுத்தது ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சையை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு சுக்கு பொடியையும் சேர்க்கலாம். இறுதியாக ஒரு சிறிய சிட்டிகை உப்பு சேர்த்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு பாயாசம் தயார்.

தேங்காய்ப்பால் மட்டும் பயன்படுத்தியும் இந்த பாயாசத்தை செய்யலாம். பாலை குறைத்து, தேங்காய்ப்பாலை அதிகரித்தால் தேங்காயின் மணம் நிறைந்த பாயாசம் கிடைக்கும்.

வழக்கமான பாயாசத்தை விட வித்தியாசமான சுவை வேண்டும் என்றால், இந்த மரவள்ளிக்கிழங்கு பாயாசம் உங்கள் வீட்டில் நிச்சயம் ஒரு முறை ட்ரை செய்ய வேண்டிய ரெசிப்பி.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sweet Corn : ஸ்வீட் கார்னா? நாட்டுச்சோளமா? எதுல அதிக சத்து தெரியுமா?
Recommended image2
கருப்பு திராட்சையின் 8 அற்புத ஆரோக்கிய நன்மைகள்
Recommended image3
Karuppu Kavuni Arisi Kozhukattai : கருப்பு கவுனி அரிசியில் இப்படி ஒரு கொழுக்கட்டையா? ஒருமுறை செஞ்சா திரும்பத் திரும்ப கேட்பாங்க!
Related Stories
Recommended image1
சுகர் இருக்கிறவங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க.. !
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved