- Home
- உடல்நலம்
- உணவு
- Ice Cream: மெஷின் வேணாம், மிக்சி வேணாம்! 10 நிமிஷத்துல 3 விதமான ஐஸ்கிரீம்... வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Ice Cream: மெஷின் வேணாம், மிக்சி வேணாம்! 10 நிமிஷத்துல 3 விதமான ஐஸ்கிரீம்... வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்
Homemade Ice Cream : வெயில் காலம் வந்தாலே ஐஸ்கிரீம் சாப்பிடணும்னு தோணும். ஆனா கடையில் வாங்குனா கெமிக்கல்ஸ் இருக்குமோனு பயம். இனி அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

Homemade Ice Cream
கொளுத்துற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு ஐஸ்கிரீம் கிடைச்சா எப்படி இருக்கும்? ஆனா, கடைகள்ல கிடைக்கிற ஐஸ்கிரீம்ல பிரிசர்வேட்டிவ்ஸ், உடம்புக்கு கெடுதலான கெமிக்கல்ஸ் எல்லாம் இருக்குமோனு நம்மில் பலருக்கும் ஒரு பயம் இருக்கும். இந்த கவலைக்கு ஒரு சூப்பர் தீர்வு சொல்லியிருக்காங்க 'மாஸ்டர்செஃப்' சீசன் 1 வின்னர் பங்கஜ் பதௌரியா. வெறும் 5 பொருட்களை வெச்சு, எந்த ஒரு விலை உயர்ந்த மெஷினும் இல்லாம, வீட்லயே 10 நிமிஷத்துல அருமையான ஐஸ்கிரீம் செய்யுற ரெசிபியை அவங்க ஷேர் பண்ணியிருக்காங்க.
உங்க ஃபேவரிட் ஐஸ்கிரீம் எது? அது சொல்லும் உங்க 'கேரக்டர்'.. யாரும் சொல்லாத ரகசியம் இதோ!
தேவையான 5 முக்கிய பொருட்கள்
இந்த ரெசிபியோட ஸ்பெஷலே, இதுக்குத் தேவையான பொருட்கள் எல்லாமே நம்ம கிச்சன்ல எப்பவும் இருக்கிற பொருள்தான்.
பால்
சர்க்கரை
கார்ன் ஸ்டார்ச் (சோள மாவு)
வெண்ணிலா எசென்ஸ்
விப்பிங் கிரீம்
ஐஸ்கிரீம் செய்வதற்கான படிப்படியான வழிமுறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சுங்க. பால் கொதிக்க ஆரம்பிக்கும்போது, ஒரு சின்ன கிண்ணத்தில் கொஞ்சம் குளிர்ந்த பால் எடுத்து, அதில் கார்ன் ஸ்டார்ச்சை கட்டி இல்லாமல் நல்லா கரைச்சு பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கோங்க. இப்போது கொதிக்கிற பாலில் இந்தக் கார்ன் ஸ்டார்ச் பேஸ்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஊத்திக்கிட்டே கைவிடாமல் கிளறுங்கள். இந்தக் கலவை கொஞ்சம் கெட்டியாகி, கஸ்டர்ட் பதத்துக்கு வந்து, கரண்டியின் பின்பக்கம் ஒரு கோட்டிங் மாதிரி ஒட்டணும். அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்த கஸ்டர்ட் முழுவதுமாக ஆற வேண்டும் என்பது ரொம்ப முக்கியம், அவசரப்படாதீங்க. கஸ்டர்ட் முழுமையாக ஆறிய பிறகு, அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்குங்கள்.
அடுத்து, இன்னொரு பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஜில்லுனு இருக்கிற விப்பிங் கிரீமை ஊற்றி, அது நல்லா கெட்டியாகி 'சாஃப்ட் பீக்ஸ்' (Soft Peaks) வரும் வரைக்கும் நன்றாக அடித்துக்கொள்ளுங்கள் (Whip). இப்போது, தயாராக ஆறவைத்திருக்கும் கஸ்டர்ட் கலவையுடன் இந்த விப்பிங் கிரீமை சேர்த்து மெதுவாக கலந்து விடுங்கள். இதைத்தான் 'ஐஸ்கிரீம் பேஸ்' என்று சொல்கிறோம்.
ஒரே பேஸ்... 3 விதமான சுவைகள்!
வெண்ணிலா
தயாரான இந்த பேஸை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீஸ் செய்தால், மணமணக்கும் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.
மேங்கோ
நன்றாக பழுத்த மாம்பழத்தின் சதையை மிக்சியில் போட்டு கூழ் (Pulp) மாதிரி அரைத்து, அதை பேஸுடன் கலந்தால், நேச்சுரல் மேங்கோ ஐஸ்கிரீம் தயார்.
சாக்லேட்
டார்க் சாக்லேட்டை உருக்கி, அதனுடன் கொஞ்சம் விப்பிங் கிரீம் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து, பிறகு அதை பேஸுடன் மெதுவாக மிக்ஸ் செய்து ஃப்ரீஸ் செய்யுங்கள்.
பெர்ஃபெக்ட் ஐஸ்கிரீமுக்கான சில டிப்ஸ்
*ஐஸ்கிரீம் நல்லா கிரீமியா வர, எப்போதும் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஜில்லென்ற கிரீமை மட்டுமே பயன்படுத்துங்கள்.
*கிரீமையும் கஸ்டர்டையும் கலக்கும்போது ரொம்ப வேகமாக கலக்க வேண்டாம். மெதுவாக மடித்துவிடுவது போல (Fold) கலந்தால் போதும்.
*ஐஸ்கிரீம் மீது ஐஸ் கட்டிகள் (Ice Crystals) உருவாகாமல் தடுக்க, எப்போதும் காற்றுப் புகாத டப்பாவைப் பயன்படுத்துங்கள். குறைந்தது 7-8 மணி நேரம் ஃப்ரீஸ் செய்யுங்கள்.
*செயற்கையான நிறமோ, ஸ்டெபிலைசரோ இல்லாமல் வீட்டிலேயே செய்யும் இந்த ஐஸ்கிரீம், கடைகளில் கிடைப்பதை விட சுவையாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த எளிய முறையை நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!

