குளிர்காலத்தில் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இவற்றை சாப்பிடுங்கள்..!!
குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியிலிருந்து விடுபட, என்னென்ன உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
குளிர்காலத்தில் மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வரும். வெப்பநிலை குறையும் போது, மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதனால்தான் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாகிறது.
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். இதன் காரணமாக, உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி இல்லாததால், மூட்டு வலிகள் மற்றும் தசை வலிகள் அதிகரிக்கும். எனவே, குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியிலிருந்து விடுபட, பின்வரும் உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
கடல் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளது. அவை உடலில் அழற்சி எதிர்ப்பு முகவர்களாக செயல்படுகின்றன. வாரத்திற்கு 3 முதல் 4 முறையாவது மீன் சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: மழைகாலம் வந்தாச்சு..கை, கால் வலி குத்தல் குடைச்சல்... காரணம்? சூப்பரான தீர்வு இங்கே..!
ஒவ்வொரு உணவிலும் பூண்டு சாப்பிடுங்கள். பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். பூண்டு சாப்பிடுவதால் மூட்டு வலி வராமல் தடுக்கலாம். பூண்டைப் போலவே, இஞ்சியும் மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும், இஞ்சி குளிர்காலத்தில் சளி மற்றும் இருமலில் இருந்து பாதுகாக்கிறது. இஞ்சி டீ அல்லது உலர்ந்த இஞ்சியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
இதையும் படிங்க: Joint Pain Relief : இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்...உங்க மூட்டு வலி பறந்து போகும்..!!
உலர் பழங்களை குளிர்கால உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உலர் பழங்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வால்நட்ஸ், பாதாம், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும். குளிர்காலத்தில் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். பால், பாலாடைக்கட்டி, புளிப்பு தயிர் சாப்பிட முயற்சி செய்யுங்கள். அவற்றில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D