MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மாரடைப்பு வராது! வறுத்த கடலையும் வெல்லமும் தரும் நன்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

மாரடைப்பு வராது! வறுத்த கடலையும் வெல்லமும் தரும் நன்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

இந்த நூற்றாண்டில் மக்களின் ஆரோக்கியம் மருந்துகளைதான் சார்ந்துள்ளது. எதற்கெடுத்தாலும் மருந்துகளை எடுத்து கொள்ளும் தலைமுறையினர் உணவே மருந்து என்பதை மறந்துள்ளன. 

2 Min read
maria pani
Published : Jan 02 2023, 03:54 PM IST| Updated : Jan 02 2023, 09:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

துரித உணவுகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் எளிய இயற்கை உணவுகளுக்கு இருப்பதில்லை. சின்ன தலைவலி தொடங்கி சோர்வு வரை எல்லாவற்றிற்கும் மருந்தை தான் சார்ந்திருக்கிறோம். இதனால் வயதாகும் போது உடல்நல பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.  ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் பல நோய்கள் ஏற்படுவதை குறைக்க முடியும். வறுத்த கடலையுடன் வெல்லம் கலந்து உண்ணும்போது பல அபரிமிதமான பலன்கள் கிடைக்கின்றன. கோடைகாலங்களில் வறுத்த கடலை, வெல்லம், தண்ணீர் ஆகியவை எடுத்து கொள்ளும்போது ஆரோக்கியம் மேம்படும். 

26
Roasted gram with Jaggery-The most underrated superfood combo

Roasted gram with Jaggery-The most underrated superfood combo

வறுத்த கடலையின் நன்மைகள் 

பேபேசி குடும்பத்தை சேர்ந்தது வறுத்த கடலை. இதில் அத்தியாவசிய வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து மிகுந்துள்ளது. இரும்பு மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஆரோக்கியமான ஜொலிக்கும் தேகத்திற்கு உதவும். பளபளப்பான சருமம் வேண்டும் என பல ரசாயன பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளலாம். அதிலும் வறுத்த கடலை வெல்லம் நல்ல பலன் தரும். 

36

வெல்லம் 

இளமையாக இருப்பதற்கு தேவையான பண்புகள் வெல்லத்தில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இதை உண்பதால் இதய நோய்கள் தவிர்க்கப்படும். 

சருமம் மினுங்கும்! 

வெல்லத்தில் இருக்கும் கிளைகோலிக் அமிலம் சருமத்தினை பராமரிக்க உதவுகிறது. வெள்ளத்துடன் வறுத்த கடலையை சேர்த்து உண்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. வறுத்த கடலை உள்ள மெக்னீசியம் சுருக்கங்களைப் போக்கி முகத்தினை இளமையாக காட்டுகிறது.  வெல்லத்துடன் வறுத்த கடலையை எடுத்து கொள்ளும்போது தசைகள் வலுப்படுகின்றன. தசையை மேம்படுத்தும் புரதங்கள் இதில் நிறைந்துள்ளன. 

46

எடையை குறைக்க உதவும்! 

வெல்லத்தில்  பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்பினால் இந்த காம்பினேஷன் உதவும். ஒரு சாதாரண நபர் ஒரு நாளில் 46 முதல் 56 கி புரதம் எடுத்து கொள்ள வேண்டும். சுமார் 100 கிராம் வறுத்த கடலை எடுத்து கொள்வது 19 கிராம் புரதத்தை வழங்குகிறது. வெல்லத்தில் எடை இழப்புக்கு தேவையான பொட்டாசியம் காணப்படுகிறது. இது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. 

56

மலச்சிக்கலை நீக்கும்! 

பெரும்பாலான மக்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். வெல்லம் மற்றும் வறுத்த கடலையை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து  செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. வெல்லம் குடல் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு செரிமான நொதிகளை தூண்டுகிறது.  இதனால் மலச்சிக்கலில் இருந்து விடுபட முடிகிறது. 

நினைவாற்றல் மேம்படும்! 

நினைவாற்றலை மேம்படுத்த  வைட்டமின் பி6 அவசியம். வறுத்த கடலையும், வெல்லமும் ஒன்றாக சாப்பிடும்போது வைட்டமின் பி6 கிடைக்கிறது. இதனால் மூளையின் செயல்பாடும் முன்னேற்றம் அடைகிறது. மேலும் ஒது நம் உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன் செரோடோனின் சுரக்க உதவுகிறது. இது மனநிலையை ஒழுங்குபடுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவும். 

66

பற்களை பராமரிக்கிறது! 

பாஸ்பரஸ் மிகுந்து காணப்படும் வறுத்த கடலை, வெல்லம் கலவையை சேர்த்து உண்ணும்போது பற்கள் பலப்படுகிறது. ஒவ்வொரு 10 கி வெல்லமும் 4 மிகி பாஸ்பரஸும், ஒவ்வொரு 100கி வறுத்த கடலையும் 168மிகி பாஸ்பரஸை உடலுக்கு அளிக்கிறது. நம்முடைய உடலுக்கு சராசரியாக 700 மிகி பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. இது எலும்புகளுக்கும் வலுவூட்டக் கூடியது. 

இதயத்தை பராமரிக்கும்! 

பலவகையான இதய நோய்களை குணபடுத்தும் சத்துகள் வறுத்த கடலை, வெல்லத்தில் உள்ளன. இதிலுள்ள பொட்டாசியம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. வெல்லம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உடலில் அமிலத்தன்மை சீராக வைத்து கொள்ள இந்த கலவையை உண்பது உதவுகிறது. வறுத்த கடலையில் கொழுப்புச்சத்து இல்லை. புரதச்சத்து தான் அதிகம் காணப்படுகிறது. ஆகவே உடல் எடையை குறைக்கவும் இதய நோயிலிருந்து விடுபடவும் உதவிகிறது. 

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
சாம்பாரை கண்டுபிடித்த ஊர் தஞ்சாவூர்..! சசி தரூர் சொன்ன சாப்பாட்டு மேட்டர்!
Recommended image2
Sugar Control: 7 வயது சிறுமியை 900- அளவை தாண்டி மென்று தின்ற சர்க்கரை... 69 ஆகக் குறைத்த வேப்பிலை- பாகற்காய்..!
Recommended image3
இந்த சிவப்பு நிற கீரை பத்தி தெரியுமா? குழந்தைகளின் கண் பார்வையை ஷார்ப் ஆக்கும்! சுகரை குறைக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved