MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Pineapple diet: ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கும் அன்னாசியின் அற்புத பலன்கள்!

Pineapple diet: ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்கும் அன்னாசியின் அற்புத பலன்கள்!

வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை மிகுந்து காணப்படும் அன்னாசிப்பழம் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அன்னாசிப்பழம் சிறந்த உணவு என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். 

2 Min read
Author : maria pani
Published : Dec 31 2022, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் வெவ்வேறு உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சிகள் எவ்வளவு பங்கு வகிக்கிறதோ, அதே போல் உணவுகளும் முக்கியத்துவம் கொண்டுள்ளன. சில உணவுகளை உண்பதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதில் ஒன்றுதான் அன்னாசி பழம். இதனை உண்பதன் மூலம் ஐந்தே நாட்களில் குறிப்பிட்ட அளவில் எடையைக் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தொப்பை குறைக்கும் அன்னாசி 

அன்னாசி பழத்தை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு உண்ண வேண்டும். தொப்பையைக் குறைக்க விரும்புவோர் பாதி அன்னாசி பழத்தை எடுத்து சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதில் 4 தேக்கரண்டி ஓமத்தை பொடியாக கலந்து கூடவே ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனை சூடு ஆறியதும் மூடி வைத்துவிடுங்கள். இந்த செயல்முறை இரவில் செய்து வைத்துவிட்டு மறுநாள் காலையில் அதிலிருந்து நன்றாக சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் போதும். தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வர தொப்பை குறைவதை உணர்வீர்கள். 

இதையும் படிங்க; New year 2023: செக்ஸ் முதல் ஸ்லீப் வரை.. புத்தாண்டில் ஹேப்பி ஹார்மோன்களை தூண்டும் வழிகள்!

35

உடலை பேணும் அன்னாசி 

அன்னாசி பழத்தில் பல வகையான ஊட்டச்சத்துக்கள், என்சைம்கள் உள்ளன. இவை நம் உடலில் எளிதில் கிரகித்துக் கொள்ளப்படும். இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். அதனால் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஆகவே சுகாதார நிபுணர்கள் அன்னாசியை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். 

இதுதான் அன்னாசி டயட்!

முதலாம் நாளில் நீரும் அன்னாசியும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் நாளில் இரண்டு கப் வேகவைத்த மீனும், அன்னாசியும் உண்ணுங்கள். ஒரு கப் மதியம், மற்றொரு கப் இரவில் உண்ணுங்கள். மூன்றாம் நாளில் நீரும் அன்னாசியும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாளில் விருப்ப உணவை உண்ணுங்கள். அதில் துரித உணவுகளோ, எண்ணெய்யில் பொரித்த உணவுகளோ இருக்க வேண்டாம். 

45

எடை குறைப்புக்கு அன்னாசி எவ்வாறு உதவுகிறது?

அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் நிறைந்துள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதை சமைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் குடல் இயக்கங்களையும் இலகுவாக்குகிறது. ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. உங்கள் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

55

அன்னாசி உண்ணும் போது கவனம் கொள்ள வேண்டியவை? 

 

ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அன்னாசியை சாப்பிடுவதை தவிர்க்கலாம். சோம்பல், சோர்வு, தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உண்ணும்போது வாய், கன்னங்களில் வீக்கம் ஏற்படும். அதிகளவில் இந்தப் பழத்தை எடுத்து கொள்ளும்போது பற்களில் கறை ஏற்படுகிறது. 

கருத்தரித்த ஆரம்ப நாட்களில் இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படலாம். நன்கு கனியாத அன்னாசி நச்சாக மாறும் அபாயம் உள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். இதில் அதிக அமிலத்தன்மை உள்ளதால் தொண்டையில் எரிச்சல், வயிறு வலி கூட சிலருக்கு ஏற்படலாம். அதனால் அளவாக உண்டு பலன்களை அனுபவியுங்கள்.  

இதையும் படிங்க; Happy new year wishes 2023: பிரியமானவர்களுக்கு பிரியங்கள்... இதோ உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்து குறிப்புகள்!

About the Author

MP
maria pani
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved