MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Milk Benefits: சூடான பால் vs கூலான பால்... உடம்புக்கு எது நல்லது? முழு விவரம் இங்கே!

Milk Benefits: சூடான பால் vs கூலான பால்... உடம்புக்கு எது நல்லது? முழு விவரம் இங்கே!

Hot Milk vs Cold Milk : நம்மில் பலருக்கும் காலையில் எழுந்ததும், இரவில் தூங்குவதற்கு முன்பும் பால் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், பாலை சூடாகக் குடிப்பதா அல்லது குளிர்ச்சியாகக் குடிப்பதா? எது சரியான தேர்வு என்பதை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 29 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hot Milk vs Cold Milk
Image Credit : Getty

Hot Milk vs Cold Milk

பால் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் தான். இதனாலேயே பாலை ஒரு முழுமையான உணவு என்று சொல்வார்கள். நம்மில் பலரும் காலையில் எழுந்தவுடனும், இரவில் தூங்குவதற்கு முன்பும் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலை சூடாகக் குடிப்பது நல்லதா அல்லது குளிர்ச்சியாகக் குடிப்பது நல்லதா? தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சூடான பாலின் நன்மைகள் என்னென்ன?
Image Credit : Getty

சூடான பாலின் நன்மைகள் என்னென்ன?

சூடான பால் குடிப்பதால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக, இரவில் சூடான பால் குடிப்பது ஒரு பழக்கம் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.

1. செரிமானத்திற்கு சிறந்தது: பாலை சூடுபடுத்தும்போது, அதில் உள்ள புரோட்டீன் மற்றும் கொழுப்பு உடைந்து, எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு வருகிறது. லாக்டோஸ் அலர்ஜி அல்லது செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சூடான பால் குடிப்பது நல்லது.

2. நல்ல தூக்கத்திற்கு உதவும்: சூடான பாலில் 'ட்ரிப்டோபான்' (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இது மூளைக்கு ஓய்வு கொடுத்து, தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடித்தால், அன்றைய நாள் முழுவதும் இருந்த சோர்வு நீங்கி நிம்மதியாகத் தூங்கலாம்.

3. உடனடி ஆற்றல் தரும்: பாலில் சிறிது பாதாம் அல்லது தேன் கலந்து சூடாகக் குடித்தால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். சளி, இருமல் இருந்தால், சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பது மிகவும் நல்லது.

4. கவனம்: அதிக சூடான பால் குடிப்பது வாய் மற்றும் தொண்டையில் புண்களை ஏற்படுத்தக்கூடும். இது பற்களின் எனாமலையும் பாதிக்கலாம். எப்போதும் வெதுவெதுப்பான பால் குடிப்பதே பாதுகாப்பானது.

Related Articles

Related image1
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Related image2
Milk Intake by Age : தினமும் பால் குடிப்பீங்களா? உங்க வயசுக்கு எவ்வளவு பால் குடிச்சா நல்லது? பலர் அறியாத தகவல்
34
குளிர்ந்த பாலின் நன்மைகள்
Image Credit : Getty

குளிர்ந்த பாலின் நன்மைகள்

கோடை காலத்தில் குளிர்ந்த பால் குடிப்பது ஒரு தனி சுகம். இது தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு வேறு பல நன்மைகளையும் தருகிறது.

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து: உங்களுக்கு கேஸ் அல்லது அசிடிட்டி பிரச்சனை இருந்தால், குளிர்ந்த பால் குடிப்பது நல்லது. குளிர்ந்த பால், வயிற்றில் உள்ள அமிலத்தின் வீரியத்தைக் குறைத்து, நெஞ்செரிச்சலை உடனடியாக நிறுத்தும்.

2. உடலைக் குளிர்ச்சியாக வைக்கும்: கோடை காலத்தில் உடல் சூடு அதிகரிக்கும்போது, குளிர்ந்த பால் குடிப்பது உடலை உள்ளிருந்து குளிர்விக்க உதவுகிறது. இது உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க சிறந்தது.

3. சரும ஆரோக்கியம்: குளிர்ந்த பால் குடிப்பதும், அதைக் கொண்டு முகத்தைக் கழுவுவதும் சருமத்திற்குப் பொலிவைத் தந்து, சருமத் துளைகளை மூட உதவுகிறது.

4. கவனம்: சைனஸ், ஆஸ்துமா அல்லது அடிக்கடி சளி பிடிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்ந்த பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தொண்டை வலி மற்றும் சுவாசப் பிரச்சனைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

44
எது சிறந்தது?
Image Credit : Getty

எது சிறந்தது?

உங்களுக்குத் தூக்கப் பிரச்சனை இருந்தாலோ அல்லது செரிமானத்தை எளிதாக்க விரும்பினாலோ சூடான பாலைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்தாலோ அல்லது கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற விரும்பினாலோ குளிர்ந்த பால் சிறந்த தேர்வாக இருக்கும். இது முற்றிலும் உங்கள் தேவையைப் பொறுத்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பால்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Green Tea vs Black Coffee: உடல் எடையை குறைக்க எது பெஸ்ட்?
Recommended image2
Kitchen Hacks: கிச்சனில் கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையா? விரட்ட இதோ சிம்பிள் டிப்ஸ்!
Recommended image3
Fire Dosa : தோசை சைக்கோ எல்லாம் ரெடியா? தெறிக்கவிடும் நெருப்பு தோசை!
Related Stories
Recommended image1
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Recommended image2
Milk Intake by Age : தினமும் பால் குடிப்பீங்களா? உங்க வயசுக்கு எவ்வளவு பால் குடிச்சா நல்லது? பலர் அறியாத தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved