MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Healthy foods for constipation problem: காலையிலேயே மலச்சிக்கலால் போராட்டமா? இந்த ஒரு பழக்கத்தை மட்டும் கடைப்பிடியுங்கள்!

Healthy foods for constipation problem: காலையிலேயே மலச்சிக்கலால் போராட்டமா? இந்த ஒரு பழக்கத்தை மட்டும் கடைப்பிடியுங்கள்!

Healthy foods for constipation problem: குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வெகுவாகப் பாதிக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கான உணவுமுறைகளை நாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

2 Min read
Author : Kalaiyarasi
Published : Nov 26 2026, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மலச்சிக்கல் காரணங்களும் நிரந்தரத் தீர்வுகளும்
Image Credit : Asianet News

மலச்சிக்கல் காரணங்களும் நிரந்தரத் தீர்வுகளும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் அன்றாடம் அவதிக்குள்ளாக்கும் முக்கியப் பிரச்சனை மலச்சிக்கல். இதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டு, சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றினால் இதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மலச்சிக்கலுக்கான இரண்டு முக்கியக் காரணங்கள்
Image Credit : our own

மலச்சிக்கலுக்கான இரண்டு முக்கியக் காரணங்கள்

பழக்கவழக்க மாற்றங்களால் ஏற்படும் மலச்சிக்கல்:

உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் மலம் கழிக்கும் பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாவது இது. மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களில் 90% முதல் 95% பேருக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது.

நோய்களால் ஏற்படும் மலச்சிக்கல்:

குடல், வயிறு சார்ந்த பிரச்சனைகள் அல்லது ஹார்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. இது சுமார் 5% பேருக்கு மட்டுமே ஏற்படும் அரிதான காரணமாகும். தைராய்டு ஹார்மோன் குறைபாடு, குழந்தைகளுக்குப் பிறவியிலேயே குடல் நரம்புகளில் ஏற்படும் குறைபாடு, பெரியவர்களுக்கு மலக்குடலில் ஏற்படும் கட்டிகள் அல்லது புற்றுநோய் போன்றவை. பலரும் மலச்சிக்கல் வந்தவுடன் குடலில் ஏதோ அடைப்பு உள்ளதாகப் பயந்து பரிசோதனைகளைச் செய்கின்றனர். ஆனால், 95% பிரச்சனைகளைச் சாதாரண உணவு மற்றும் பழக்கவழக்க மாற்றங்கள் மூலமே சரிசெய்துவிட முடியும்.

35
மலச்சிக்கலின் நச்சுச் சுழற்சி
Image Credit : This is a representative image generated using Gemini AI

மலச்சிக்கலின் நச்சுச் சுழற்சி

நாம் உண்ணும் உணவு செரிமானமான பிறகு, சிறுகுடலில் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் பெருங்குடலுக்குச் செல்கின்றன. பெருங்குடல் அந்தக் கழிவுகளிலிருந்து சுமார் 200 மி.லி வரை நீரை உறிஞ்சிக்கொண்டு, மீதமுள்ள கழிவுகளை 18 முதல் 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும்.

ஏதேனும் ஒரு காரணத்தால் மலம் கடினமாகி, மலம் கழிக்கும்போது வலி ஏற்பட்டால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வலிக்குப் பயந்து மலம் கழிப்பதைத் தவிர்க்கத் தொடங்குவார்கள். இதனால் கழிவுகள் குடலிலேயே பல நாட்கள் தேங்கும். கழிவுகள் குடலில் தங்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, பெருங்குடல் அதிலுள்ள நீரைத் தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டே இருக்கும். இதனால் மலம் கல்லுப் போல மேலும் இறுகி, அடுத்த முறை மலம் கழிக்கும்போது அதிக வலியை ஏற்படுத்தும்.

45
மலச்சிக்கலைத் தீர்க்கும் உணவுமுறை
Image Credit : This is a representative image generated using Gemini AI

மலச்சிக்கலைத் தீர்க்கும் உணவுமுறை

நிறையத் தண்ணீர் குடித்தால் மட்டுமே மலச்சிக்கல் சரியாகிவிடும் என்பது தவறான கருத்து. நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், பெருங்குடல் அதனை உறிஞ்சிக்கொள்ளும். மாறாக, நாம் உண்ணும் உணவில் உள்ள நீரைப் பெருங்குடல் உறிஞ்ச விடாமல் தடுத்து, கழிவுகளோடு சேர்த்துத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை உணவுக்கு இருக்க வேண்டும்.

உணவில் உள்ள நார்ச்சத்து மட்டுமே நீரைத் தக்கவைத்து மலத்தை மென்மையாக்கும். ஒரு நாளைக்குப் பெரியவர்களுக்கு 40 - 50 கிராம் நார்ச்சத்தும், குழந்தைகளுக்கு 15 - 20 கிராம் நார்ச்சத்தும் தேவைப்படுகிறது.

நார்ச்சத்தைப் பெறுவதற்கு மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான உணவுகள் கீரைகள் மற்றும் காய்கறிகள் மட்டுமே. இவற்றில் செரிமானமாகாமல் சக்கையாக வெளியேறும் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. தினமும் 300 முதல் 400 கிராம் அளவிற்குக் கீரைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எல்லா வகையான கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் சிக்கன், மட்டன் போன்ற புரதச்சத்து மிகுந்த அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், 200 கிராம் அசைவம் சாப்பிடும்போது, அதனுடன் சேர்த்து 200 கிராம் காய்கறி சாலட், பச்சடி அல்லது பொரியல் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது.

55
குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கம்
Image Credit : This is a representative image generated using Gemini AI

குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கம்

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை மூளைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். தினமும் காலையில் உதாரணமாக 7 அல்லது 8 மணிக்கு 15 நிமிடங்கள் கட்டாயம் கழிவறையில் அமர வேண்டும். இந்திய வகை கழிவறையைப் பயன்படுத்துவது மலத்தை எளிதாக வெளியேற்ற உதவும். குழந்தைகளுக்கும் தினமும் ஒரே நேரத்தில் கழிவறையில் அமரும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இது மூளையில் ஒரு வழக்கமாகப் பதிவாக 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.

About the Author

K
Kalaiyarasi
ஆரோக்கிய குறிப்புகள்
 
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Onion Thuvaiyal : வெங்காய துவையல்..இட்லி, தோசை, ஏற்ற சுவையான துவையல் ரெசிபி!
Recommended image2
Varamalli Thuvaiyal : மணக்க மணக்க வரமல்லி துவையல்.. இட்லி, தோசை, சாதத்திற்கு அட்டகாசமான ரெசிபி!
Recommended image3
Pulicha Keerai Thokku : புளிச்சைக்கீரை தொக்கு இருந்தால் போதும்.. ஒரு பிடி சாதம் கூடுதலாகச் சாப்பிடுவீங்க!
Related Stories
Recommended image1
Is Sweating Healthy? அதிக வியர்வை ஃபிட்னஸ்க்கான அடையாளமா? இல்ல நோய் அறிகுறியா?
Recommended image2
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved