MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கொளுத்தும் வெயில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்கனுமா?.. அப்போ இதை குடிங்க..!!

கொளுத்தும் வெயில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்கனுமா?.. அப்போ இதை குடிங்க..!!

வெளுத்து வாங்கும் இந்த கோடை வெயிலில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது குறித்து இங்கு காணலாம்....

2 Min read
Author : Kalai Selvi
Published : Apr 29 2023, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தற்போது,   இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுகிறது, வரும் நாட்களில் இந்த வெப்பம் மேலும் அதிகரிக்கும். எனவே, கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகரிக்கும். அப்படியானால் இதைப் போக்க என்ன செய்யலாம்? 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கொளுத்தும் இந்த கோடையில் கர்ப்பிணி பெண்கள் தங்களை நீரேற்றுத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.  அதுவும் குறிப்பாக  ஆரோக்கியமான பானத்தை அருந்துவது சிறந்தது. இதோ சில ஆரோக்கியமான பானங்கள் உங்களை குளிர்ச்சியாக்கும் மற்றும் கொளுத்தும் வெப்பத்தில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

38
இளநீர்:

இளநீர்:

நீரிழப்பைத் தவிர்க்க இளநீர் சிறந்த வழி. இளநீர் சோர்வைப் போக்கவும் மற்றும் தாகத்தைத் தணிக்க உதவுகிறது. கர்ப்ப காலத்தில் வாந்தியெடுத்தல் (Vomit) காரணமாக உடலில் திரவங்களின் பற்றாக்குறையை சமாளிக்க இளநீர் உதவுகிறது .

48
எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளதால் இது உடலை ஈரப்பதமாக வைக்கிறது. கர்ப்ப காலத்தில் எலுமிச்சை சாப்பிடுவது குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து விடுபட உதவும்.

58
பழச்சாறு:

பழச்சாறு:

தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி, மாதுளை மற்றும் திராட்சை ஆகியவற்றிலிருந்து புதிய பழச்சாறுகளை தயாரித்து குடிக்கலாம். பழங்கள் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் பழச்சாறும் அருந்தலாம். தர்பூசணி மற்றும் மாம்பழச்சாறு வெப்பமான காலநிலைக்கு நல்லது. 
 

68
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பானங்கள்:

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பானங்கள்:

பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. கோடையில் கொழுப்பு நீக்கிய பால், லஸ்ஸி, மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். இவை உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும். இது தவிர, பால், தயிர், ஐஸ் மற்றும் பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மில்க் ஷேக் (மில்க் ஷேக்) அல்லது ஃப்ரூட் ஸ்மூத்தியை குடிக்கலாம். மினரல்கள் மற்றும் சத்துக்கள் நிறைந்த இதை உணவுக்கு இடையில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது நல்லது.

78
வீட்டில் தயாரிக்கப்படுபவை:

வீட்டில் தயாரிக்கப்படுபவை:

மாம்பழ பன்னா வீட்டிலேயே செய்து குடிக்கலாம். இவை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது மற்றும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் உண்டா? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க...!!

88
காய்கறி சாறு:

காய்கறி சாறு:

கர்ப்பிணிப் பெண்கள் உணவில் போதுமான காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது சிரமமாக இருந்தால், காய்கறி சாறும் குடிக்கலாம். கோடை வெயிலில் தாகம் தணிக்க தண்ணீரைத் தவிர வேறு எதையாவது குடிப்பதற்கு பதிலாக, குளிர்ந்த காய்கறி சாறு அருந்தலாம்.

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!
Recommended image2
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!
Recommended image3
Blood Sugar: இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும் 7 சூப்பர் உணவுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved