- Home
- உடல்நலம்
- உணவு
- Fruit Juice: தாகமா இருக்குன்னு அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் தேடி வருமாம்.. முழு விவரம்!
Fruit Juice: தாகமா இருக்குன்னு அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் தேடி வருமாம்.. முழு விவரம்!
Fruit Juice: தாகமாக இருக்கு என்று அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா? நிறைய ஆபத்துகள் உங்களை தேடி வருமாம். ஒரு நாளைக்கு எத்தனை ஜூஸ் குடிகக் வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

தாகமா இருக்குன்னு அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா?
தாகமாக இருக்கு என்று அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா? நிறைய ஆபத்துகள் உங்களை தேடி வருமாம். ஒரு நாளைக்கு எத்தனை ஜூஸ் குடிகக் வேண்டும்? எப்போது குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
வெயில் காலமோ, குளிர் காலமோ... பழங்கள், ஜூஸ் குடிப்பது உடலுக்கு ரொம்பவே முக்கியம். தினமும் பழச்சாறு குடிக்கலாம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பழங்களில் இருக்கும் நல்ல கொழுப்பு இதயத்திற்கு மிகவும் நல்லது. என்னதான் இதில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக ஜூஸ் குடிப்பது உடலுக்கு கெடுதலைத் தரும்.
ஆரோக்கியத்தை பாதிக்கும்
டயட் என்ற பெயரில் சிலர் காலை, மதியம், மாலை என ஒரு நாளைக்கு பலமுறை ஜூஸ் குடிப்பார்கள். பழங்களை ஜூஸாக குடிக்கும்போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்காது. மேலும், பழங்களில் ஃப்ரக்டோஸ் எனப்படும் இயற்கை சர்க்கரை அதிக அளவில் உள்ளது.
ஒரு நாளைக்கு நான்கைந்து முறை ஜூஸ் குடித்தால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெயில் காலத்தில் தாகம் எடுப்பது இயல்புதான். அதற்காக தாகம் எடுக்கும்போதெல்லாம் ஜூஸ் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை இன்றே மாற்றுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
ஜூஸில் எவ்வளவு கலோரிகள் உள்ளன?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பழச்சாறுகளில் அதிக கலோரிகள் உள்ளன. ஒரு கப் ஜூஸில் 117 கலோரிகள் மற்றும் சுமார் 21 கிராம் சர்க்கரை உள்ளது. இதில் ஃப்ரக்டோஸ் அளவு மிக அதிகம்.
அதிகமாக ஜூஸ் குடித்தால் என்ன நடக்கும்?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, எந்த உணவையும் அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிகமாக ஜூஸ் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய், பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் வரும். இது கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். கேஸ்ட்ரிக் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக ஜூஸ் குடிக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு எவ்வளவு ஜூஸ் குடிக்கலாம்?
பழங்களை அப்படியே சாப்பிடும்போது கிடைக்கும் நார்ச்சத்து, ஜூஸாக குடிக்கும்போது கிடைப்பதில்லை. ஜூஸில் ஃப்ரக்டோஸ் அதிகமாக இருப்பதால் அது ஆரோக்கியத்தை கெடுக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் குடித்தால் போதும். அதற்கு மேல் குடிப்பது ஆபத்தானது. அந்த நேரத்திற்கு அது இதமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
ஜூஸ் குடிக்க சரியான நேரம் எது?
ஒரு நாளைக்கு எவ்வளவு ஜூஸ் குடிக்கிறோம் என்பதை விட, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பது மிக முக்கியம். பலர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். சிலர் தூங்குவதற்கு முன் குடிப்பார்கள். இந்த இரண்டுமே தவறான முறை என நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் ஜூஸ் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். காலை உணவுக்குப் பிறகு ஜூஸ் குடிப்பது நல்ல பழக்கம். குறிப்பாக, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

