- Home
- உடல்நலம்
- உணவு
- அலுமினிய பாத்திரத்தில் 'இந்த' 5 உணவுகளை சமைத்தால் ஆபத்து! ஏன் தெரியுமா? முழு விவரம்!
அலுமினிய பாத்திரத்தில் 'இந்த' 5 உணவுகளை சமைத்தால் ஆபத்து! ஏன் தெரியுமா? முழு விவரம்!
Aluminum Cookware Dangers: தக்காளி, எலுமிச்சை, புளி போன்ற புளிப்பான மற்றும் அதிக உப்புள்ள உணவுகளை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக் கூடாது. இதனால் உணவில் உலோகம் கலக்க வாய்ப்புள்ளது. எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

அலுமினிய பாத்திரத்தில் இந்த 5 உணவுகளைச் சமைக்காதீர்கள்
புளிப்பு மற்றும் அதிக உப்பு உள்ள உணவுகளை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும்போது, பாத்திரத்தில் உள்ள உலோகத் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்பு இருக்கிறது. இதை 'அலுமினியம் லீச்சிங்' (Aluminium leaching) என்று சொல்வார்கள். இதன் பாதிப்பு உடனே தெரியாது. ஆனால், தொடர்ந்து இந்த மாதிரி உணவுகளைச் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம், எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். அதனால், இந்த மாதிரி உணவுகளைச் சமைக்கவோ, சேமித்து வைக்கவோ எவர்சில்வர் (Stainless steel) அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவது தான் மிகவும் நல்லது.
தக்காளி குழம்பு மற்றும் சாஸ்
தக்காளியில் இயற்கையாகவே அமிலத்தன்மை (Acidic) இருக்கிறது. அதனால், தக்காளியை அலுமினிய பாத்திரத்தில் அதிக நேரம் சமைக்கும்போது, உணவில் உலோகம் கலக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. தக்காளி கிரேவி, குழம்பு, சாஸ் செய்ய எவர்சில்வர் பாத்திரத்தைப் பயன்படுத்துவது தான் பாதுகாப்பானது.
எலுமிச்சை சேர்த்த உணவுகள்
எலுமிச்சை மற்றும் பிற புளிப்பான பழங்களில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது. இதன் சாற்றை அலுமினிய பாத்திரத்தில் சூடுபடுத்தும்போது, உலோகம் உணவில் கரைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், எலுமிச்சை சாதம், கிரேவி போன்ற புளிப்பான உணவுகளை எவர்சில்வர் பாத்திரத்தில் சமைப்பது தான் நல்லது.
மாவு போன்ற உணவுகள்
மாவு போன்ற புளிக்க வைத்த உணவுகளை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கவோ, அதிக நேரம் சேமித்து வைக்கவோ கூடாது. இந்த உணவுகள் பாத்திரத்தோடு சேரும்போது, உலோகத் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிகமாக உப்பு சேர்த்த உணவுகள், அலுமினிய பாத்திரத்தில் இருந்து உலோகத்தை வெளியேற்றும் வாய்ப்பை அதிகரிக்கும். அதனால், உப்பு அதிகம் உள்ள கருவாடு, ஊறுகாய் அல்லது உப்பு தூக்கலாக உள்ள குழம்புகளைச் சமைக்கவும் சேமிக்கவும் எவர்சில்வர் பாத்திரத்தையே பயன்படுத்துங்கள்.
அலுமினிய பாத்திரம் பயன்படுத்துபவர்கள் கவனியுங்க
அலுமினிய பாத்திரங்கள் முழுமையாக ஆபத்தானவை கிடையாது. சாதாரணமாகப் பயன்படுத்தும்போது உணவில் கலக்கும் உலோகத்தின் அளவு மிகவும் குறைவுதான். இருந்தாலும், புளிப்பு மற்றும் அதிக உப்புள்ள உணவுகளை இதில் அதிக நேரம் சமைப்பதையோ, சேமிப்பதையோ தவிர்ப்பது நல்லது.
புதிய அலுமினிய பாத்திரங்களை விட, நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு உட்புறம் தேய்ந்துபோன, கீறல் விழுந்த அல்லது நிறம் மாறிய அலுமினியப் பாத்திரங்கள் ஆபத்தானவை. பாத்திரத்தின் மேல் பகுதி சேதமடையும் போது, நாம் சமைக்கும் உணவில் அலுமினியத் துகள்கள் மிக எளிதாகவும் விரைவாகவும் கலக்கத் தொடங்கும். எனவே, பாத்திரங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை உடனடியாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

