- Home
- உடல்நலம்
- உணவு
- மீன் குழம்பை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாள் சாப்பிடலாம்? கெட்டுப்போகாம இருக்க சூப்பர் டிப்ஸ்!
மீன் குழம்பை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாள் சாப்பிடலாம்? கெட்டுப்போகாம இருக்க சூப்பர் டிப்ஸ்!
மீன் குழம்பு செய்து அடுத்த நாள் சாப்பிட்டால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். ஆனால் ஃப்ரிட்ஜ்ல வைத்த மீன் குழம்பை எத்தனை நாள் சாப்பிடலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஃப்ரிட்ஜில் மீன் குழம்பை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?
எல்லா குழம்பையும் விட மீன் குழம்புக்கு ஒரு ஸ்பெஷல் குணம் உண்டு. இந்த குழம்பை உடனே சாப்பிடுவதை விட, ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். இதனாலேயே, பலர் அதிகமாக குழம்பு செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனால், அது எத்தனை நாட்கள் வரை பாதுகாப்பானது என்பது முக்கியம். மீன் குழம்பை (Fish Gravy) ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
ஃப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்
பொதுவாக, மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால், அதில் உள்ள புரோட்டீன்கள் சிதைந்து உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, 4 நாட்களுக்குப் பிறகு அந்த குழம்பை சாப்பிடுவது நல்லதல்ல. ஒருவேளை நீங்கள் டீப் ஃபிரீசரில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும், ஆனால் அதன் சுவை குறைந்துவிடும். மீன் குழம்பில் நாம் புளியை அதிகமாகப் பயன்படுத்துவதால், அது ஒரு நேச்சுரல் பிரிசர்வேட்டிவ் (Preservative) போல செயல்பட்டு, குழம்பு சீக்கிரம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்கிறது.
சூடாக இருக்கும்போதே ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்
குழம்பு சூடாக இருக்கும்போதே ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். இது ஃப்ரிட்ஜின் உள் ஈரப்பதத்தை அதிகரித்து, மற்ற பொருட்களையும் கெட்டுப்போகச் செய்துவிடும். மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைப்பதாக இருந்தால், கண்ணாடி அல்லது நல்ல தரமான பிளாஸ்டிக் ஏர்-டைட் டப்பாக்களைப் பயன்படுத்துங்கள். இதனால், மீன் வாசனை மற்ற பொருட்களுக்குப் பரவாது. ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குழம்பை மொத்தமாக சூடுபடுத்த வேண்டாம். உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் தனியாக எடுத்து சூடுபடுத்துங்கள். முழு குழம்பையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதிலுள்ள சத்துக்கள் அழிந்து, மீன் துண்டுகளும் உடைந்துவிடும்.
2-3 நாட்களில் காலி செய்யுங்கள்
ஒருவேளை குழம்பின் மேல் வெள்ளைப் படலம் தெரிந்தாலோ, குழம்பு பிசுபிசுப்பாக மாறினாலோ அல்லது விசித்திரமான வாசனை வந்தாலோ அது கெட்டுவிட்டது என்று அர்த்தம். இதுபோன்ற உணவைச் சாப்பிட்டால் வாந்தி, பேதி போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மீன் குழம்பு சுவைக்காக சேமித்து வைப்பது சரிதான், ஆனால் அது ஆரோக்கியத்தின் எல்லைக்குள் இருக்கட்டும். முடிந்தவரை 2-3 நாட்களிலேயே அதை காலி செய்வது சிறந்தது.

