MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • வெந்தயம் நம் உடலில் இவ்வளவு வேலைகளை செய்யுமா? 1 கைப்பிடி வெந்தயத்தில் மறைந்திருக்கிறது இத்தனை நன்மைகள்!!

வெந்தயம் நம் உடலில் இவ்வளவு வேலைகளை செய்யுமா? 1 கைப்பிடி வெந்தயத்தில் மறைந்திருக்கிறது இத்தனை நன்மைகள்!!

வெந்தயம் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், இதில் பல ஆரோக்கிய நன்மைகள் மறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால், சரும பராமரிப்பு முதல், சர்க்கரை நோய் வரை பல உடல்நல பிரச்சனைகளை குறைக்கலாம்

2 Min read
Author : maria pani
Published : Apr 08 2023, 07:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

வெந்தயம் பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெந்தய விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பயோட்டின், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெந்தயம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது. இப்போது வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அறிந்து கொள்வோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

முடி வளரும்! 

வெந்தயத்தின் முக்கியமான நன்மைகளில் இதுவும் ஒன்று. வெந்தயத்திற்கு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது. வெந்தயம் நம் தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் நிறைந்துள்ளன. வெந்தயம் பயன்படுத்தினால் முடி உதிர்தல், பொடுகு, நரை முடியை அறவே நிறுத்துகிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து, காலையில் குளிக்கும் முன்பு வெந்தய ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். உடல் குளுமையாகி முடி வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். 

37

சர்க்கரை நோய் கட்டுப்பாடு! 

வெந்தயத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் கெட்டியான ஜெல்லை உருவாக்குகிறது. இது சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஜீரணிக்க உதவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெந்தயத்தில் 4-ஹைட்ராக்ஸிசோலுசின் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

47

எடை குறையும்! 

வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும். இவை அனைத்தும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும். வெந்தயம் குறிப்பாக வயிற்று கொழுப்பை எரிக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது. இது பசியைக் குறைக்கவும், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் கலவைகளையும் கொண்டிருக்கின்றன. அவை அதிகப்படியான உணவைக் குறைக்கின்றன. தினமும் வெந்தய நீர் அருந்தலாம் அல்லது வெந்தயத்தை சாப்பிடலாம். 

57

பருக்கள் குறையும்! 

வெந்தயத்தின் மற்றொரு நன்மை முகப்பருவை விரைவில் குறைக்கும். இது நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஈரப்பதத்தை வைத்திருக்கிறது. வெந்தயத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!

67

செரிமானம் மேம்படும்!! 

வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. நம்முடைய வயிற்றுக் கோளாறுகளை முற்றிலும் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. வெந்தயம் இரைப்பை, குடல் அழற்சியை நீக்குகிறது. இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

77

கொலஸ்ட்ரால் குறையும்! 

வெந்தயம் கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது, கெட்ட கொழுப்பை குறைத்து இருதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. இதில் சபோனின்களும் உள்ளன. அவை குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. இது மாதவிடாய் வலிக்கு நிவாரணியாக இருக்கிறது.  

இதையும் படிங்க: கேன்சர் வராமல் தடுக்கும் உணவுகளின் பட்டியல்.. இந்த 10 உணவுகள்! எத்தனை நோய் வந்தாலும் விரட்டும்..!!

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Recommended image2
வழக்கமான சட்னி சாப்பிட்டு சலிச்சு போச்சா? 10 நிமிடத்தில் சுவையான 'காரைக்குடி ஸ்பெஷல்' சட்னி!
Recommended image3
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved