- Home
- உடல்நலம்
- உணவு
- வேடிக்கையாக நடந்த மேஜிக்; Britannia Croissant ஏன் Prashant என்று மாற்றப்பட்டது தெரியுமா?
வேடிக்கையாக நடந்த மேஜிக்; Britannia Croissant ஏன் Prashant என்று மாற்றப்பட்டது தெரியுமா?
Britannia Croissant Renames Prashant : ஒரு படைப்பாளரின் தவறான உச்சரிப்பால் ஒரு பிராண்டின் பெயர் மாற்றப்பட்ட சம்பவம் இளசுகளின் விருப்ப ஸ்நாக்ஸான Britannia Croissant ஆனது இப்போது Prashant ஆக மாறியிருப்பதோடு மட்டுமின்றி அதனுடைய பேக்கிங்க் கவரையும் மாற்றியுள்ளது.

பிரிட்டானியாவின் ட்ரீட் குரோசண்ட்
Britannia Croissant Renames Prashant : பிரிட்டானியாவின் ட்ரீட் குரோசண்ட் இளசுகளின் விருப்ப ஸ்நாக்ஸ்களில் ஒன்று. அதிகளவில் பிரபலமானதும் கூட. அதன் சுவை மட்டுமே அதிகளவில் பேசப்பட்டது அல்ல பிராண்டும் அதிகளவில் பேசப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு Britannia Croissant புதுமையான ஒருநாள் பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த பயிற்சி திட்டம் என்னவென்றால், குரோசண்ட் என்பதை யார் சரியாக உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த போட்டி ஆரம்பித்து 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
குரோசண்ட் பிரஷாந்த் என்று மாறிய தருணம்:
எனினும் யாராலயும் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதே போன்று தான் இந்த ஆண்டும் ஒரு வேடிக்கை நிகழந்தது. அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேக்கரி உணவுகளின் பெயர்களை படைப்பாளர் ஒருவர் யூகித்து குரோசண்டை பிரஷாந்த் என்று தவறுதலாக அழைத்தார். அப்படி அவர் சொன்ன அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது. அதுமட்டுமின்றி அவர் தவறுதலாக அழைத்த அந்த பெயரையே பிராண்டாகவும் முடிவு செய்துள்ளனர்.
பிரிட்டானியா பிரஷாந்த்
அதன்படி அந்த பிராண்டானது தற்காலிகமாக 'பிரிட்டானியா பிரஷாந்த்' என்று மாற்றபட்டுள்ளது. அதோடு அதனுடைய பயோவும் பிரஷாந்த், நாம் தோ சுனா ஹி ஹோகா என்று மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், பேக்கிங் கவரும் பிரிட்டானியா பிரஷாந்த் என்று மாற்றப்பட்டுள்ளது. பலரும் இந்த பிராண்டை பிரசாந்த் என்று மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளனர்.
குரோய்சன்ட்' முதல் 'பிரஷாந்த்' வரை
இந்த மாற்றத்திற்கு காரணமான அந்த படைப்பாளருக்கு ஒரு சிறப்பு 'பிரசாந்த்/குரோய்சன்ட்' ஹேம்பரை அனுப்பியது. 'குரோய்சன்ட்' முதல் 'பிரஷாந்த்' வரை, இணைய தருணங்களை சந்தைப்படுத்தல் தங்கமாக மாற்றும் கலையை பிரிட்டானியா இப்போது நிரூபித்து காட்டியுள்ளது.