இனி சப்பாத்தி என்றால் "சில்லி சப்பாத்தி" தான் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்!
சில்லி இட்லி, சில்லி பரோட்டா, சில்லி பிரெட் போன்ற வரிசையில் இன்று நாம் சில்லி சப்பாத்தி ரெசிபியை காண உள்ளோம். இதனை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக டின்னருக்கு சப்பாத்தி,புல்கா,நாண் போன்ற ரொட்டி வகைகளை தான் சாப்பிடுவோம். இதில் ஒரு சிலர் சற்று வித்தியாசமாக சப்பாத்தியை எப்போதாவது முட்டை சப்பாத்தி, வெஜ் சப்பாத்தி, கொத்து சப்பாத்தி போன்றவை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
பொதுவாக சில்லி இட்லி, சில்லி பரோட்டா, சில்லி பிரெட் போன்ற வரிசையில் இன்று நாம் சில்லி சப்பாத்தி ரெசிபியை காண உள்ளோம். இதனை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை ஒரு முறை செய்து கொடுத்தால் பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் கூறும் அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு ரைத்தா வைத்து சாப்பிட்டால் இதன் சுவை இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 5
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
சிவப்பு ஃபுட் கலர் - 1 சிட்டிகை
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
டொமேட்டோ சாஸ் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - 2 கையளவு
நா ஊறும் நண்டு கட்லெட்!
செய்முறை:
முதலி வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லித்தழை ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சப்பாத்திகளை ஒரே மாதிரியான அளவில் பிய்த்து அல்லது அதனையும் அரிந்து வைத்துக் கொள்ளலாம்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
இரண்டும் நன்கு வதங்கிய பிறகு, அதில் டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை ஊற்றி நன்றாக கிளறி விட்டு 21 நிமிடம் வதக்கி விட வேண்டும் . இப்போது ஒரு சின்ன போயிலில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் சிட்டிகை ரெட் புட் கலர் சேர்த்து நன்றாக கலந்து அதனை கடாயில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும் .
அடுத்தாக பிய்த்து வைத்துள்ள சப்பாத்தி பீஸ்களை கடாயில் போட்டு சிறிது உப்பு தூவி நன்றாக கிளறி விட வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாசனை வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இறுதியாக பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை சேர்த்து சுட சுட பரிமாறினால் அட்டகாசமான சில்லி சப்பாத்தி ரெடி!