MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • மோர் உடல் சூட்டை தான் தணிக்கும்னு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 டம்ளர் மோர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் இருக்கு!

மோர் உடல் சூட்டை தான் தணிக்கும்னு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 டம்ளர் மோர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் இருக்கு!

கோடைகாலத்தில் மோர் அருந்துவது தயிரை விட அதிக நன்மை பயக்கும் என சொல்வதன் காரணத்தை இங்கு முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்.  

2 Min read
Author : maria pani
Published : Mar 14 2023, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வெயில் கடுமையாக கொளுத்த தொடங்கிவிட்டது. கோடை காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் உணவை எடுத்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், மோர் (buttermilk) ரொம்பவும் நன்மை பயக்கும் என சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

25

தயிருடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி தயாரிக்கப்படுவது மோர். இது தயிரைக் காட்டிலும் அதிகப் பலன் தருகிறது. கோடை காலத்தில் எல்லா வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும். இது உடலுக்கு குளிர்ச்சியையும், ஆற்றலையும் தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. மோர் நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

35

நீரழிவு நீங்கும் 

வெயில் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும். இது விலையும் குறைவுதான். மோர் சத்துக்களின் களஞ்சியம் என்றால் மிகையல்ல. உப்பு, சர்க்கரை, புதினால ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்ச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உஷ்ணம் ஆகியவை தவிர்க்கப்படும். 

45
Image: Getty Images

Image: Getty Images

கண்களுக்கு குளிர்ச்சி

அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் உணர்வு ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்களில் இருக்கும் எரியும் உணர்வு நீங்கும். கண்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். அதே போல் சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் மோர் தடவவும். உடனடி நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க: தினமும் அரை ஸ்பூன் மஞ்சள் சாப்பிட்டு பாருங்க.. உங்கள் உடலில் அற்புதம் நடப்பது உறுதி..!

55
Image: Getty Images

Image: Getty Images

அசிடிட்டி நீங்கும் 

அசிடிட்டி என்பது இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கோடையில் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலும் உடலில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மோர் அசிடிட்டிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. கொஞ்சம் கல் உப்பு, கருமிளகு, சீரகம் கலந்து மோரை குடித்து பாருங்கள். அமிலத்தன்மை உடனே மறையும். ஆகவே தான் ஆண்களும் பெண்களும் மதியம் மோர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ghee Benefit: குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் நெய் கொடுப்பதால் இவ்வளவு நலனா?
Recommended image2
Gas Problem: வயிறு உப்பசம், கேஸ் தொல்லையா? இந்த ஒரு பானம் போதும்!
Recommended image3
உடல் எடை குறைக்க டயட் வேண்டாம்… இதை மட்டும் சேர்த்தா போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved