குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டில் இவ்வளவு சைடு எஃபெக்ட் இருக்கா!
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று பிஸ்கட். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடும்போது உடலுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Biscuits
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று பிஸ்கட். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் பிஸ்கட்டுகளை அதிகம் சாப்பிடும்போது உடலுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Biscuit Side effects
பிஸ்கட் தயாரிக்கும்போது அதிக வெப்பநிலையில் பாமாயில், டால்டா போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் டிரான்ஸ்ஃபேட் அமிலம் உருவாகிறது. இந்த அமிலம் அதிகமாக உடலில் கலந்தால் கொழுப்பு அதிகமாகி இதய நோய்கள் ஏற்படக்கூடும். பெரும்பாலான பிஸ்கட் பாக்கெட்களில் இந்த அமிலத்தின் அளவைக் குறிப்பிடுவதில்லை.
Biscuit consumption
பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருக்கவும் சுவையூட்டவும் உப்பு பயன்படுத்தப்படும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் உப்பு அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகள் உண்டாக்கும். சுவை, நிறம் மற்றும் பதப்படுத்தல் காரணங்களுக்காக பயன்படுத்தும் வேதிப்பொருள்களும் உடலுக்குக் கேடு விளைவிக்கலாம்.
Biscuits and health risk
பிஸ்கட் தயாரிக்கும்போது வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எவ்வளவு மிருதுவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு புரதச்சத்து நிறைந்ததாக இருக்கும். ஆனால், இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.
Eating Biscuits
பிஸ்கட்டில் சோடியம் பைகார்பனேட் அதிகளவு உள்ளது. இது உடலில் அதிகமாக சேர்ந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் போன்றவை பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடலில் தேவையில்லாத கொழுப்புச் சத்து சேர்ந்து உடல் எடையும் கூடும்.
Biscuits for Children
கலோரி குறைவாக உள்ளதாகக் கூறி பல பிஸ்கட்டுகள் விற்கப்படுகின்றன. ஒரு க்ரீம் பிஸ்கட் குறைந்தது 40 கலோரிகள் கொண்டதாக இருக்கும். பிஸ்கட்டை நொறுக்குதீனியாக நிறைய சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. டீ, காபி, பாலுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். குழந்தைகள் இப்படிச் சாப்பிடுவதால் அவர்களுக்குச் செரிமானக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு உண்டு.