- Home
- உடல்நலம்
- உணவு
- Beetroot Podi Urundai: பீட்ரூட் சூப்பர் டேஸ்டி பொடி உருண்டை! ஒருமுறை ட்ரை பண்ணுங்க..திரும்பத் திரும்ப செய்யத் தோணும்
Beetroot Podi Urundai: பீட்ரூட் சூப்பர் டேஸ்டி பொடி உருண்டை! ஒருமுறை ட்ரை பண்ணுங்க..திரும்பத் திரும்ப செய்யத் தோணும்
Beetroot Podi Urundai: பீட்ரூட் சாப்பிட பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில், இடியாப்பம் மாவு, பீட்ரூட், தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து சுவையான உருண்டை செய்யலாம். எளிதான இந்த இனிப்பு ஸ்நாக்ஸை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்.
15

Image Credit : Pinterest
பீட்ரூட் பொடி உருண்டை
பீட்ரூட் சாப்பிட பிடிக்கலையா? இப்படி ட்ரை பண்ணுங்க. பீட்ரூட்டின் சுவை பிடிக்காத குழந்தைகளுக்குக் கூட பிடிக்கும் வகையில், வீட்டில் இருக்கும் இடியாப்பம் மாவை வைத்து பீட்ரூட் பொடி உருண்டை செய்து பாருங்கள்.
பீட்ரூட்டின் அழகான நிறம், தேங்காயின் சுவை, ஏலக்காயின் மணம் என ஒவ்வொரு உருண்டையும் நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும். மாலை நேர சிற்றுண்டியாகவும், குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ் ஸ்நாக்ஸாகவும் இதை செய்து கொடுக்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Pinterest
தேவையான பொருட்கள்
இடியாப்பம் மாவு - 1 கப்
பீட்ரூட் - 1 சிறியது
தேங்காய் துருவல் - 1\2 கப்
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - 3\4 கப்
ஏலக்காய் பொடி - 1\2 டீஸ்பூன்
நெய் - 1 முதல் 2 டீஸ்பூன்
முந்திரி - 2 டேபிள்ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
35
Image Credit : Pinterest
செய்வது எப்படி?
- முதலில் பீட்ரெட்டை தோல் சீவி நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளலாம்.
- ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் சாற்றை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் சூடானதும் இடியாப்பம் மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். அடுப்பை அணைத்து, மாவு கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும் நன்றாக பிசைந்து மென்மையான மாவாக மாற்றிக் கொள்ளுங்கள்.
- ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை, துருவிய தேங்காய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
45
Image Credit : Pinterest
பீட்ரூட் சூப்பர் டேஸ்டி பொடி உருண்டை ரெடி
- பின்னர் கடாயில் வெல்லத்தைச் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். வெல்லம் உருகியவுடன் அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, துருவிய தேங்காய், திராட்சையை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- இப்போது தயார் செய்த இடியாப்பம் மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு உருண்டையையும் கையில் வைத்து தட்டி, நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி உருண்டையாக உருட்டுங்கள்.
- கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டால் மாவு ஒட்டாமல் அழகாக உருண்டை பிடிக்க முடியும்.
- தயார் செய்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 8 - 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு பரிமாறலாம்.
55
Image Credit : Pinterest
சுவையை இன்னும் கூட்ட சில குறிப்புகள்
- பீட்ரூட்டின் இனிப்புக்கு ஏற்ப வெல்லத்தின் அளவை மாற்றிக் கொள்ளலாம்.
- ஏலக்காயுடன் சிறிது சுக்கு பொடி சேர்த்தால் நல்ல மணம் கிடைக்கும்.
- முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
- மிகவும் மென்மையான உருண்டை வேண்டுமென்றால் இடியாப்பம் மாவை அதிகமாக உலர்த்தாமல் பிசைய வேண்டும்.
- பீட்ரூட் சாறு பயன்படுத்துவதால் உருண்டைக்கு இயற்கையான அழகான நிறமும் கிடைக்கும்.
- வெல்லம் சேர்க்கும்போது கலவை மிகவும் தண்ணீராகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் உருண்டை பிடிப்பது சிரமமாக இருக்கும்.
Latest Videos

