MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • டீக்கடை ஸ்டைலில் மொறுமொறு வெங்காய பக்கோடா... மாலை நேர சூடான டீக்கு பெஸ்ட் ஸ்நாக்ஸ்!

டீக்கடை ஸ்டைலில் மொறுமொறு வெங்காய பக்கோடா... மாலை நேர சூடான டீக்கு பெஸ்ட் ஸ்நாக்ஸ்!

Crispy Onion Pakoda Recipe in Tamil: மாலை நேர டீயுடன் மொறுமொறுவென சுவைக்க அசத்தலான வெங்காய பக்கோடா. பேக்கரி ஸ்டைலில் வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி என்று இந்த எளிய செய்முறையைப் பற்றி பார்ப்போம்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 11 2026, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாலை நேர டீக்கு மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா!
Image Credit : google

மாலை நேர டீக்கு மொறுமொறுப்பான வெங்காய பக்கோடா!

மாலை நேரப் பொழுதுகளில் மொறுமொறுப்பான உளுந்து வடையோ அல்லது பக்கோடாவோ சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக, மழைக்காலங்களிலோ அல்லது வீட்டிற்கு திடீரென விருந்தினர்கள் வரும்போதோ, மிகக் குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சிறந்த சிற்றுண்டியாக வெங்காய பக்கோடா விளங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்த மொறுமொறுப்பான வெங்காய பக்கோடாவை வீட்டிலேயே மிக எளிதாகச் செய்வதற்கான செய்முறை பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : AI Image

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2

கடலை மாவு – 1 கப்

இஞ்சி – 1 சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 2

சீரகம் – 1/2 ஸ்பூன்

குருமிளகு / மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் (அல்லது சமையல் எண்ணெய்) – பொரிக்கத் தேவையான அளவு

35
செய்முறை விளக்கம் - 1
Image Credit : Freepik

செய்முறை விளக்கம் - 1

முதலில் பெரிய வெங்காயத்தின் தோலை உரித்து, நன்றாகக் கழுவி, மெலிதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

45
செய்முறை விளக்கம் - 2
Image Credit : freepik

செய்முறை விளக்கம் - 2

தொடர்ந்து, அந்த வெங்காயக் கலவையுடன் சீரகம், மிளகு, தேவையான அளவு உப்பு மற்றும் கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். வெங்காயத்தில் உள்ள ஈரப்பதமே மாவு பிசைவதற்குப் போதுமானது என்பதால், தேவைப்பட்டால் மட்டும் மிகச் சிறிய அளவு தண்ணீர் தெளித்து, மாவு வெங்காயத்துடன் ஒட்டிப் பிடிக்குமாறு கெட்டியாகப் பிசைந்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

55
செய்முறை விளக்கம் - 3
Image Credit : Asianet News

செய்முறை விளக்கம் - 3

இதையடுத்து, அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து, பொரிப்பதற்குத் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிச் சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள வெங்காயக் கலவையைச் சிறிய உருண்டைகளாகவோ அல்லது உதிரியாகவோ எண்ணெயில் போட வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து, பக்கோடாவின் இருபுறமும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும் வரை நன்றாகப் பொரித்து எடுத்தால், சூடான மற்றும் சுவையான வெங்காய பக்கோடா தயாராகிவிடும்.

இதைச் சூடான கட்டன் சாயா (கடுங்காப்பி அல்லது ஸ்ட்ராங் டீ) உடன் சேர்த்துச் சாப்பிடும் போது இதன் சுவை அலாதியாக இருக்கும் என்றும், மாலையில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க இது ஒரு மிகச்சிறந்த பலகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Protein Rich Breakfast: பீட்சாவையே ஓரம்கட்டும் சுவை..! முட்டைகோஸில் இப்படி ஒரு ஆம்லெட்டா..?
Recommended image2
Rice Murukku : மீந்த சாதத்தில் மொறுமொறுப்பான முறுக்கு செய்வது எப்படி? இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Recommended image3
Vazhakkai Thuruval: வாழைக்காயை வேகவைத்தும் சமைக்கலாமா? தேங்காய் மணத்துடன் இப்படி துருவல் செய்து பாருங்க!
Related Stories
Recommended image1
Gulab Jamun : தீபாவளி ஸ்வீட் டிப்ஸ்... விரிசல் இல்லாத சாஃப்டான குலாப் ஜாமூன் செய்வது எப்படி?
Recommended image2
Rice Murukku : மீந்த சாதத்தில் மொறுமொறுப்பான முறுக்கு செய்வது எப்படி? இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved