- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Shampoo + Sugar : ஷாம்பூவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் நடக்கும் மேஜிக் தெரியுமா?
Shampoo + Sugar : ஷாம்பூவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் நடக்கும் மேஜிக் தெரியுமா?
Shampoo + Sugar : ஷாம்பூவுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து தலைக்குக் குளித்தால் என்ன ஆகும்? இந்த சின்ன மாற்றம் உங்கள் முடியில் பெரிய மேஜிக்கை செய்யும்.

ஷாம்ப்பூவுடன் சர்க்கரை சேர்ப்பதன் நோக்கம் என்ன?
ஷாம்ப்பூவுடன் சர்க்கரை சேர்ப்பதன் முக்கிய நோக்கம் அதன் சிறந்த 'எக்ஸ்ஃபோலியன்ட்' செயல்திறன் ஆகும். அதாவது, தலையின் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்க இது உதவுகிறது. இதன் மூலம் உச்சந்தலை ஆரோக்கியமாகி, முடி பளபளப்பாக மாறும்.
இதையும் படிங்க : Mileage Bikes : ரூ.80,000 பட்ஜெட்டில் 75 கி.மீ மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!
ஷாம்பூ மற்றும் சர்க்கரை கலவையின் நன்மைகள்
- இறந்த செல்களை நீக்கும்.
- தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.
- ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற பொருட்களின் மிச்சங்களை ஆழமாக சுத்தம் செய்யும்.
- இந்த ஆழமான சுத்தத்தால், முடி பளபளப்பாக மாறும்.
இதையும் படிங்க : EB Bill : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா? காரணம் என்ன? மின்வாரியம் சொல்றத கேளுங்க!
பயன்படுத்தும் முறை
சர்க்கரையை ஷாம்பூ பாட்டிலில் கொட்ட வேண்டாம். பயன்படுத்தும்போது மட்டும் கலக்கவும். உள்ளங்கையில் தேவையான அளவு ஷாம்பூ எடுத்து, அதில் 1-2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இரண்டையும் கலந்து, தலையில் தேய்த்து ஒரு நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு, சர்க்கரை துகள்கள் முழுமையாக போகும் வரை நீரால் அலசவும். கடைசியாக கண்டிஷனர் பயன்படுத்தவும்.
இதையும் படிங்க : Panchagraha Rajayoga : மகாலட்சுமி அருளும், பஞ்சகிரக ராஜயோகமும் சேர்ந்து ஜாக்பாட் அடிக்கப் போகும் 5 ராசிகள்!
எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?
இது ஒரு ஸ்க்ரப்பிங் முறை என்பதால், தினமும் செய்யக்கூடாது. உங்களுக்கு எண்ணெய் பசை முடி என்றால், வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். வறண்ட முடி அல்லது சென்சிடிவ் உச்சந்தலை உள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.
இதையும் படிங்க : Baby Food : 6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தைகள் என்னென்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?
எச்சரிக்கை
உங்களுக்கு அதிகப்படியான பொடுகு, கடுமையான முடி உதிர்வு, அல்லது தலையில் புண்/எரிச்சல் இருந்தால் இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம். இதுபோன்ற சமயங்களில், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. இது ஒரு வீட்டு வைத்தியம் மட்டுமே, மருத்துவ சிகிச்சை அல்ல.
இதையும் படிங்க : Ginger : இஞ்சி தோலை ஏன் உரிக்கிறோம்? உண்மை தெரிஞ்சா இனி தூக்கிப் போட மாட்டீங்க!

