- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Lice Removal Tips : குழந்தைகளுக்கு ஈறும், பேனும் புழுத்து கிடக்கா? நிரந்தரமாக நீங்க சூப்பர் வீட்டு வைத்தியங்கள்!!
Lice Removal Tips : குழந்தைகளுக்கு ஈறும், பேனும் புழுத்து கிடக்கா? நிரந்தரமாக நீங்க சூப்பர் வீட்டு வைத்தியங்கள்!!
தலையில் இருக்கும் ஈறு, பேனை நிரந்தரமாக விரட்ட உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Lice Removal Tips
தலையில் ஈறுகள், பேன்கள் இருந்தாலே அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும். இவற்றை நீக்குவது சற்று கடினமான விஷயம். பேன்களை விரட்ட மருந்துகள் இருந்தாலும் ஈறுகளை தலையில் இருந்து நீக்க முடியாது. கூந்தலில் இருக்கும் ஈறுகள், பேன்களை நிரந்தரமாக நீக்குவதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் காணலாம்.
வெங்காய சாறு :
தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காய சாற்றை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியா மற்றும் ஆண்டி ஃப்கஸ் பண்புகள் தலையில் இருந்து ஈறு, பேன்களை நிரந்தரமாக நீக்கும் மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். இதற்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து அரைத்து அதன் சாற்றை உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு பேன் சீப்பு கொண்டு வாறினால் தலையில் இருக்கும் ஈறு, பேன்கள் வெளியே வந்துவிடும். பிறகு எப்போது போல ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு 3-4 நாட்கள் இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பூண்டு :
பூண்டில் இருக்கும் கடுமையான வாசனை மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்பு தலையில் இருக்கும் பேன் மற்றும் ஈறுகளை அகற்ற உதவுகிறது. 8-10 பூண்டை நன்றாக அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு பேன் சீப்பு கொண்டு வாரி பின் மிதமான சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய வேண்டும்.
வேப்ப எண்ணெய் :
வேப்பெண்ணெயில் இருக்கும் கடுமையான வாசனை மற்றும் அதன் கசப்பு தன்மையானது உச்சந்தலையில் இருக்கும் ஈறுகள் மற்றும் பேன்களை நிரந்தரமாக நீக்க உதவுகிறது. இதற்கு தலைக்கு குளிப்பதற்கு சுமார் 30 முதல் 20 நிமிடங்களுக்கு முன் வேப்ப எண்ணெயை தலையில் தேய்க்க வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.
தேயிலை எண்ணெய் :
தேயிலை எண்ணெய் என்பது நாம் பயன்படுத்தும் சில அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். இதில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்பு தலையில் இருக்கும் ஈறுகள், பேன்களை நிரந்தரமாக அகற்ற உதவுகிறது. இதற்கு தேயிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து உச்சந்தலை முதல் நுனி தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு ஷவர் கேப் கொண்டு தலை முடியை கவர் செய்து விட்டு ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு பேன் சிப்பை பயன்படுத்தி தலையில் இருக்கும் ஈறுகள், பேன்களை அகற்றுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

