MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • 56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?

56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?

Khushbu Beauty Secrets : நடிகை குஷ்புவுக்கு இப்போது 56 வயதாகிறது. அவர், சமீபத்தில் 38 கிலோ எடையை குறைத்து தனது பளபளப்பான சருமத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவரின் அழகு ரகசியம் பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 18 2026, 07:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Khushbu Beauty Secrets
Image Credit : Asianet News

Khushbu Beauty Secrets

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை குஷ்பு சுந்தருக்கு இப்போது 56 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் தனது உடல் எடையை குறைத்ததன் மூலமும், பளபளப்பான சருமத்தின் மூலமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் இயற்கையான முறையில் சுமார் 38 கிலோ எடையை குறைத்துள்ளதாக குஷ்பு கூறியுள்ளார். அத்துடன் தனது எளிமையான சரும பராமரிப்பு (ஸ்கின்கேர்) முறைகள் குறித்தும் அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

அதிகாலையிலேயே தனது நாளை தொடங்கும் குஷ்பு சுந்தர், முக பராமரிப்புக்காக காய்ச்சாத பால், குங்குமப்பூ, தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார். ஆனால், இந்த பொருட்களை முகத்தில் தடவுவதால் நிஜமாகவே சருமம் பளபளப்பாக மாறுமா? இது அனைவரின் சருமத்திற்கும் செட் ஆகுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
காலை 4.30 மணிக்கே எழுந்து முகத்தை பராமரிக்கும் குஷ்பு!
Image Credit : khushsundar/ Instagram

காலை 4.30 மணிக்கே எழுந்து முகத்தை பராமரிக்கும் குஷ்பு!

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தனது சரும பராமரிப்பு குறித்து குஷ்பு சுந்தர் பேசியிருந்தார். அதில், தான் தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள் எழுந்து விடுவதாக அவர் தெரிவித்தார். குடும்பத்தினருக்கு டீ போட்டு கொடுப்பதுடன், தனது முக பராமரிப்புக்காகவும் அவர் நேரம் ஒதுக்குகிறார்.

சில நேரங்களில் முகத்தில் காய்ச்சாத பாலை தடவிக்கொள்கிறார். வேறு சில நாட்களில் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை முகத்தில் தடவுகிறார். இன்னும் சில நாட்களில் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்கிறார். இப்படி தினமும் சுமார் அரை மணி நேரம் தனது சரும பராமரிப்புக்காக அவர் செலவிடுவதாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

குஷ்புவின் இந்த எளிமையான வழக்கம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் இந்த பொருட்களின் நன்மைகள் குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

35
பியூட்டி டிப்ஸ்
Image Credit : X/khushsundar

பியூட்டி டிப்ஸ்

1. காய்ச்சாத பாலை முகத்தில் தடவுவதால் என்ன பயன்?

பாலில் கொழுப்பு, புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் தொடர்பான சத்துக்கள் உள்ளன. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சில அழகு சாதனப் பொருட்களில் லாக்டிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இதனால்தான் பாலை முகத்தில் தடவும் வீட்டு வைத்தியம் ரொம்பவே பிரபலமாக உள்ளது.

ஆனால், காய்ச்சாத பாலை நேரடியாக முகத்தில் தடவுவதால் சருமம் வெள்ளையாக மாறும் அல்லது தழும்புகள் நிரந்தரமாக குறையும் என்பதற்கு போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. காய்ச்சாத பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் அதை முகத்தில் தடவுவதை ஒரு நிரூபிக்கப்பட்ட சரும சிகிச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.

2. குங்குமப்பூ தண்ணீர் சருமத்தை பளபளப்பாக்குமா?

பாரம்பரிய அழகு பராமரிப்பில் குங்குமப்பூ பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் கொண்ட சில சேர்மங்கள் உள்ளன. குங்குமப்பூ சாறு கலந்த சில சரும பராமரிப்பு பொருட்கள் குறித்தும் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் நடந்துள்ளன.

ஆனால், குங்குமப்பூ சாற்றை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தும் கிரீம்கள் குறித்த ஆய்வுகளை வைத்துக்கொண்டு, குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து முகத்தில் தடவினாலும் அதே பலன் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

குங்குமப்பூ தண்ணீர் அனைவரின் முகத்திலும் பளபளப்பை அதிகரிக்கும் அல்லது கரும்புள்ளிகளை நீக்கும் என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆய்வுகள் இல்லை. அதனால் இதை சரும பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாக நினைக்கக் கூடாது.

45
அழகு ரகசியம்
Image Credit : others

அழகு ரகசியம்

3. தேங்காய் எண்ணெய் முகத்திற்கு நல்லதா?

சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் இருந்து ஈரப்பதம் வெளியேறுவதை குறைக்க இது உதவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், தேங்காய் எண்ணெய் அனைவரின் சருமத்திற்கும் செட் ஆகாது. குறிப்பாக எண்ணெய் வழியும் சருமம் அல்லது முகப்பரு பிரச்சனை உள்ளவர்களுக்கு, இது சரும துளைகளை அடைத்து முகப்பருவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பாதாம் எண்ணெயும் சிலருக்கு செட் ஆகலாம், இன்னும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் எந்த ஒரு எண்ணெயையும் முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு, அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

4. வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பலாமா?

பால், குங்குமப்பூ மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் பாரம்பரிய அழகு பராமரிப்பில் இடம் பெற்றிருந்தாலும், அவற்றின் பலன் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சருமத்தின் தன்மை, வயது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சரும பிரச்சனைகள் ஆகியவை முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாதாரண சரும பராமரிப்புக்காக வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் பாதுகாப்பை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முகப்பரு, எக்ஸிமா, மெலாஸ்மா அல்லது ஹார்மோன்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் இருந்தால் வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்புவது நல்லதல்ல. சில பொருட்கள் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கலாம். அதுபோன்ற நேரங்களில் தோல் மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.

55
பளபளப்பான சருமத்திற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய வழிகள்
Image Credit : instagram/@khushsundar

பளபளப்பான சருமத்திற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய வழிகள்

சரும பராமரிப்புக்காக விலை உயர்ந்த பொருட்கள் தான் வேண்டும் என்ற அவசியமில்லை. அடிப்படையான பராமரிப்பை சரியாக பின்பற்றினாலே போதும்.

மென்மையான கிளென்சர்: உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிளென்சரை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யுங்கள்.

மாய்ஸ்சரைசர்: சருமத்தின் தன்மைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

சன்ஸ்கிரீன்: பகல் நேரங்களில் பிராட்-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனை பயன்படுத்தி சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

புதிய பொருட்களை பயன்படுத்துவதில் கவனம்: ஏதேனும் புதிய தயாரிப்பு அல்லது வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தும்போது சருமத்தில் சிவந்து போதல், எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால் உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

மொத்தத்தில், குஷ்பு சுந்தரின் எளிமையான சரும பராமரிப்பு வழக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவரது சருமத்தின் பளபளப்புக்கு இந்த பொருட்கள் மட்டுமே காரணம் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது என்பதால், உங்கள் சருமத்தின் தேவைக்கு ஏற்ற பராமரிப்பை தேர்ந்தெடுப்பதுதான் ரொம்பவே முக்கியம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குஷ்பூ
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Moringa Powder Benefits: முகம் 10 வயசு குறைஞ்ச மாதிரி தெரியணுமா? முருங்கை இலை செய்யும் மாயாஜாலம்..!
Recommended image2
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Recommended image3
Nalangu Maavu: சோப்புக்கு குட்பை... நலங்கு மாவுக்கு வெல்கம்! வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Khushbu : 'அதே பாசம், அதே புன்னகை'... குடும்பத்தோடு முதல்வர் விஜய்யை சந்தித்த பின் குஷ்பு போட்ட நெகிழ்ச்சி பதிவு..!
Recommended image2
Khushbu Weight Loss: 98-ல் இருந்து 40 கிலோ எடை குறைத்த குஷ்பு! அந்த ஜப்பான் டெக்னிக் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved