அட! முடி வளர கருஞ்சீரக எண்ணெய் 1 போதுமே! மெலிந்து போன முடியை கூட ஒரே நாளில் கருகருவென அடர்த்தியாக மாற்றும்!
முடி உதிர்வு, பொடுகு, முடி உடைதல் போன்ற அனைத்து வகையான தலைமுடி தொடர்பான பிரச்சனைகளும் தீர இந்த எண்ணெய் பயன்படுத்தி பாருங்கள்.
எல்லோருக்கும் அழகான பட்டு போன்ற கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் காடு மாதிரி அடர்த்தியான முடியை பெற வேண்டும் என்று சிலர் பல விஷயங்களை முயன்று பார்த்திருப்பார்கள். உங்களுக்கு தலைமுடியில் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு சத்து குறைபாட்டால் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும். சிலருக்கு மன அழுத்தத்தால் முடி உதிரும். பொடுகு, தலையில் அழுக்கு சேர்தல், பிசுபிசுப்பான முடி போன்ற காரணங்களும் முடி உதிர்விற்கு காரணமாக அமையும்.
தலைமுடியை பராமரிக்காமல் விட்டால் எத்தனை முறைகளில் முயன்றாலும் முடி வளராது. முடி செழித்து வளர கருஞ்சீரகம் நமக்கு உதவும். எப்படி? ரொம்பவும் எளிமையான முறைதான். நாம் வீட்டிலேயே கருஞ்சீரகத்தை வைத்து எண்ணெய் தயார் செய்து முடிக்கு பயன்படுத்தலாம். கருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் நம்முடைய முடியை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வும் குறைகிறது. இந்த எண்ணெய் மிதமான சூட்டில் தயார் செய்து தலையில் தேய்க்க வேண்டும். இரவில் தேய்த்து விடிந்ததும் தலைக்கு குளித்தால் முழுபலன் கிடைக்கும்.
கருஞ்சீரக எண்ணெய் செய்முறை!!
கருஞ்சீரக எண்ணையை கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய் எண்ணெய், தேன் ஆகியவற்றை நன்கு கலந்து இரண்டு கைகளின் உள்ளங்கையிலும் எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். முடிகளின் வேர்க்கால்கள் வரை எண்ணெயின் வீரியம் இறங்கும் அளவுக்கு நன்கு மசாஜ் செய்யுங்கள்.
உங்களுடைய மண்டையில் எண்ணெய் நன்கு ஊற வேண்டும். நன்கு மசாஜ் செய்யுங்கள். நாம் தயார் செய்த கருஞ்சீரக எண்ணெய்யை மண்டை முதல் தலைமுடியின் நுனி வரைக்கும் தடவ வேண்டும். தொடர்ந்து இளஞ்சூடுள்ள தண்ணீரில் துண்டை நனைத்து, நன்கு பிழிந்து அதை தலையில் சுற்றிக் கொள்ளுங்கள். இப்படி 20 நிமிடங்கள் அப்படியே அமருங்கள். பின்னர் குளிக்கலாம்/ தலையை அலசலாம். வாரம் 1 தடவை செய்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.