Karthigai Deepam: அபிராமியால் தீபாவுக்கு வந்த ஆப்பு, மலர் லெட்டரால் மாட்ட போவது யார்? கார்த்திகை தீபம் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பாட்டு போட்டி பற்றி கொளுத்தி போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரமேஸ்வரி பாட்டி தீபாவுக்கு மலருக்கும் பாட்டு போட்டி நடத்த போவதாக சொல்ல தீபா நம்ம பாடினால் கார்த்திக்கு பல்லவி நான் தான் என்ற உண்மை தெரிந்து விடும் என தயங்குகிறாள். அபிராமி இவளுக்கு பாட்டு பாட வராதே என நினைத்து கொண்டு என்ன செய்வது என தவிக்கிறாள்.
இருந்தாலும் தீபாவை விட்டு கொடுக்கலாம் சமையலயே நீ அசத்திட்ட, உன்னால் பாட்டும் பாட முடியும், ஒருநாள் நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு பாடு என்று சொல்ல தீபா மறுப்பு தெரிவிக்க முடியாமல் சம்மதம் சொல்கிறாள். அதன் பிறகு மலர் கார்த்தியிடம் தனியாக பேச ஆசைப்பட்டு முத்து பட பாணியில் ஒரு பேப்பரில் இரவு 10 மணிக்கு தன்னை தோட்டத்தில் தனியாக சந்திக்கவும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என எழுதி தூக்கி போட அதை ஐஸ்வர்யா எடுத்து படித்து அருண் எழுதியதாக நினைத்து கொண்டு தூக்கி போட அருண் அதை எடுத்து படித்து ஐஸ்வர்யா எழுதியதாக நினைத்து கொள்கிறான்.
இப்படி இந்த லெட்டர் எல்லாரிடமும் வலம் வந்து கார்த்தியின் மீதும் விழ அவன் தீபா என்று நினைத்து கொள்ள அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததும் அதை தீபா மீது தூக்கி போட தீபா கார்த்திக் எதோ பேச ஆசைப்படுவதாக புரிந்து கொள்ள கடைசியாக அந்த லெட்டர் பரமேஸ்வரி பாட்டி கையில் சிக்கி விடுகிறது. இதை படித்து பார்த்த பாட்டி கடுப்பாகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D