இரவில் ஒதுக்குப்புறமாக சந்தித்த காதல் ஜோடி! ரகசியமான நோட்டமிட்ட இளைஞர்கள்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்.!
காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கேவிகே நகரைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே ஒதுக்குப்புறமாக இருவரும் சந்தித்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காதலனை அடித்து விரட்டினர். பின்னர், இளம்பெண்ணை தங்களது இருசக்கர வாகனத்தில் தெற்கு பீச் ரோட்டில் உள்ள ரயில்வே டிராக் பகுதிக்கு கூட்டிச் சென்று இருவரும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் இரண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.