- Home
- Gallery
- கேப்டனின் ரசிகை டூ தேமுதிக பொதுச்செயலாளர்... யார் இந்த பிரேமலதா விஜயகாந்த்? அவர் கடந்து வந்த பாதை
கேப்டனின் ரசிகை டூ தேமுதிக பொதுச்செயலாளர்... யார் இந்த பிரேமலதா விஜயகாந்த்? அவர் கடந்து வந்த பாதை
கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகையாக இருந்து தற்போது தேமுதிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் பிரேமலதா பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Premalatha Vijayakanth
1969-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி பிறந்தவர் பிரேமலதா விஜயகாந்த். இவர் இளங்கலை ஆங்கிலப்பட்டப் படிப்பு படித்துள்ளார். நடிகராக விஜய்காந்த் உச்சத்தில் இருந்தபோது அவரது தீவிர ரசிகையாக இருந்த பிரேமலதா, ஒருகட்டத்தில் அவரது மனைவி ஆனார். இவர்களது திருமணம் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி தான் முன் நின்று நடத்தி வைத்தார்.
DMDK premalatha vijayakanth
இல்லத்தரசியாக மட்டுமின்றி அப்போதே ரசிகர் மன்ற நிர்வாகம் மற்றும் விஜயகாந்துக்கு சொந்தமான கல்லூரி நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார் பிரேமலதா. 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை விஜயகாந்த் தொடங்கியதும், அதில் சேர்ந்து கட்சியை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றினார் பிரேமலதா.
இதையும் படியுங்கள்... விஜயகாந்தின் எளிமையில் மயங்கிய பிரேமலதா... ரசிகையாக இருந்து கேப்டனை கரம்பிடித்ததன் சுவாரஸ்ய பின்னணி
Vijayakanth wife Premalatha
2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த தேமுதிக, 41 இடங்களில் போட்டியிட, அதில் 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த தேர்தல் களத்தில் கட்சிக்காக பிரேமலதா தீவிர பரப்புரையில் ஈடுபாட்டார். பின்னர் 2018-ம் ஆண்டு தேமுதிக-வின் பொருளாளராக நியமிக்கப்பட்ட பிரேமலதா, கட்சியை வழிநடத்தி முழுநேர அரசியலில் இறங்கினார்.
premalatha vijayakanth sons
அண்மையில் தேமுதிக பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார் பிரேமலதா. விஜயகாந்த் - பிரேமலதா ஜோடிக்கு விஜயபிரபாகர், ஷண்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜய பிரபாகரனும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் விஜயகாந்தின் இரண்டாவது மகன் ஷண்முகப்பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!