சக்தி பிரசாத்.. கன்னட உலகை கலக்கிய மாஸ் வில்லன் - நம்ம லியோ பட மாஸ் நடிகரின் அப்பா தான் இவரு தெரியுமா?
Kannada Actor Sakthi Prasad : தமிழ் சினிமா உலகை தாண்டி உலக சினிமாவிற்கே, வாரிசு நடிகர்கள் என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. அந்த அளவிற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நடிப்புத் துறையில் பெரிய அளவில் சாதித்தும் இன்றளவும் சாதித்து கொண்டும் வருகின்றனர்.
Kannada Actor Shakthi Prasad
அந்த வகையில் கன்னட திரை உலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து மாபெரும் புகழ் பெற்ற வில்லன் நடிகர் தான் சக்தி பிரசாத். இவருடைய இயற்பெயர் ஜே.சி. ராமசுவாமி.
நீங்க chubbyயா இருக்கீங்களா? நடிகை வித்யூலேகா ஸ்டைலில் மாடர்ன் லுக்கில் இந்த தீபாவளியை ஜமாய்ங்க!
Kannada Actor Shakthi
1928 ஆம் ஆண்டு பிறந்த இவர் கன்னட திரையுலகில் நடிக்கத் தொடங்கினார், 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில் துவங்கி, 1980 ஆம் ஆண்டுகளில் இறுதிவரை இவர் பல கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மிகச் சிறந்த வில்லன் நடிகராக வலம் வந்த இவர் வேறு யாரும் அல்ல ஒரு பிரபல நடிகரின் தந்தை தான்.
Action King Arjun
நம் தளபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி உலக அளவில் சக்க போடு போட்டு வரும் லியோ திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக தோன்றி நடித்த, தமிழ் திரை உலகின் ஆக்சன் கிங்கான அர்ஜுன் அவர்களுடைய தந்தை தான் இவர். நம்மில் பலருக்கு அர்ஜுன் அவர்களையும் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் அவர்களையும் நன்கு தெரியும். ஆனால் அவருடைய தந்தையும் ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலரும் அறிந்திடாத ஒரு உண்மை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D