Tamilnadu Dam : தமிழகத்தின் மிக உயரமான அணைகள் எது.? எங்கே இருக்கிறது தெரியுமா.?
விவசாயத்திற்கு முக்கிய தேவை நீர், இந்த நீரை சேமித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அணைகளாகும், மன்னர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் காலத்திலும், முதலமைச்சராக இருந்த காமராஜர் ஆட்சியிலும் பல அணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அணைகள் தான் தற்போது உள்ள காலத்தில் அட்சய பாத்திரமாக விளங்கி வருகிறது.
அட்ஷய பாத்திரம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயம் மட்டுமில்லாமல், குடிநீருக்காக நீரை சேமித்து வைக்கும் பொக்கிஷமாக இருப்பது அணைகளாகும், அணைகள் மட்டும் கட்டப்படவில்லையென்றால் அனைத்து நீரும் வீணாக கடலில் கலக்கும். இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உயிர் வாழவே கடினமான சூழல் உருவாகியிருக்கும். மழைக்காலத்தில் பெய்யும் நீரை சேமித்து வைத்து கோடை காலம் முழுவதும் விநியோகிக்கும் அட்ஷய பாத்திரமாக அணைகள் உள்ளது.
ஆசியாவிலேயே ஆழமான அணை
அந்தவகையில் தமிழகத்தில் 104 அணைகள் உள்ளன. பல இடங்களில் அணைகள் கட்டப்பட்டாலும் ஒரு சில அணைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் அணைகளின் உயரம், எங்கு கட்டப்பட்டுள்ளது. என்பதை தற்போது பார்க்கலாம். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோலையார் அணை. ஆசியாவியே மிகப்பெரிய ஆழமான அணையாக இந்த அணை உள்ளது.
சோலையாறு அணை
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். 1965 ஆம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஆறுகள் வழியாக சோலையாறு அணையை சென்றடைகிறது. சோலையாறு அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது.
aliyar dam
ஆழியாறு, அமராவதி அணை
கோவை மாவட்டம் வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆழியாறு அணை. ஆண்டு முழுவதும் கடல் போல் காட்சியளிக்கும் இந்த அணையாகும். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 120அடியாகும், கொங்கு மாவட்டத்தில் முக்கிய அணையாக உள்ளது. கொங்கு மாவட்டத்தில் உள்ள மற்றோரு முக்கியமான அணை அமராவதி அணையாகும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இதன் நீர் தேக்க உயரம் 110 அடிகளாகும், மிகப்பெரிய நீர் தேக்கமாக உள்ளதால் மீன்பிடித்தொழில் மற்றும் முதலைப் பண்ணை உள்ளது.
papanasam
பாபநாசம் அணை
அடுத்ததாக திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாக இருப்பது பாபநாசம் அணை, 143 அடி உயரம் வரை இந்த அணையில் நீர் தேக்க முடியும். ஆண்டுதோறும் நீர் நிரம்பியிருக்கும் அணை இதுவாகும். இந்த அணையால் தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். பாபநாசத்தின் நீளமானது 744 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 5,500 பில்லியன் கன அடி உள்ளது.
mettur dam full
மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையானது காவிரி ஆற்றங்கரை மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையானது 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்திலே அணைகளில் மிகப்பெரிய அணை மேட்டூர் அணையாகும். மேட்டூர் அணையின் உயரமானது 120 அடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. டெல்டா மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
வைகை அணை நீர்மட்டம் என்ன.?
வருசநாட்டில் உருவாகும் வைகையின் குறுக்கே, ஆண்டிபட்டியில் வைகை அணை நிறுவப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் 111 அடிகளாகும். தென் மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இந்த வகை அணை உள்ளது.
kallanai open
கல்லணையை கட்டியது யார்.?
தமிழகத்தின் முதன்மையான அணை கல்லணையாகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கல்லணையில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கல்லணையை கரிகால சோழனால் காவிரி நதி குறுக்கே கட்டப்பட்டது. கல்லணையின் நீர் கொள்ளளவு 66 அடியை கொண்டுள்ளது.