MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும்? வெளியான அறிவிப்பு!

இந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் எப்போது செலுத்தப்படும்? வெளியான அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவலை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Oct 07 2023, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.  அவர்களின் வங்கிக் கணக்கில் செப்டம்பர் 14-ம் தேதி முதலே பணம் செலுத்தப்பட்டது.

24

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று புலம்பி வந்தனர்.  இதனையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 30 நாட்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். 

34

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பிக்க தவறியவர்கள்  தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை எப்போது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. 

44

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதியே வங்கியில் செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved