4ஆவது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்ற விராட் கோலி!
கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
Virat Kohli - ICC Award
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
Virat Kohli
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 4ஆவது முறையாக விராட் கோலி சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli
இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு விராட் கோலி ஐசிசி விருது வென்றார். இதே போன்று 2024 ஆம் ஆண்டு ஐசிசி விருது வென்றார். 2016 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருது வென்றார். 2024 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருது வென்றார்.
Virat Kohli - ICC Award
கடந்த ஆண்டு மட்டும் விராட் கோலி மொத்தமாக 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1377 ரன்கள் குவித்துள்ளார். இதில், 6 சதங்களும், 8 அரைசதங்களும் அடங்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தமாக 765 ரன்கள் எடுத்துள்ளார்.
Virat Kohli ICC Award
இந்த நிலையில் தான் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், விராட் கோலிக்கு ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வழங்கி கௌரவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற வார்ம் அப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Virat Kohli ICC Award
ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
T20 World Cup 2024
ஆனால், இந்தப் போட்டியில் விராட் கோலி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
T20 World Cup 2024
குரூப் ஏ: கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியா.
இதில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.