3 போட்டிகளில் மொத்தமே 5 ரன்னு தான் – ரன் மெஷினான விராட் கோலி நிரூபிக்க வேண்டிய நேரம் இது!
டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து 1, 4, 0 என்று 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
IND vs CAN, T20 World Cup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
IND vs CAN, T20 World Cup 2024
இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், விராட் கோலி விளையாடிய 3 போட்டியிலும் மொத்தமாக 1,4, 0 என்று 5 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
IND vs CAN, T20 World Cup 2024
இன்று நடைபெறும் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி நன்றாக விளையாடி அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மேலும், இந்தப் போட்டியில் ரோகித் சர்மா உடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
IND vs CAN, T20 World Cup 2024
மேலும், விராட் கோலி 3ஆவது வரிசையில் இறங்க வேண்டும் என்றும், அப்போது தான் அவர் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் பலரும் விமர்சித்துள்ளனர். இதுவரையில் விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். ஆனால், 3ஆவது வரிசையில் ரிஷப் பண்ட் களமிறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.
IND vs CAN, T20 World Cup 2024
இதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
IND vs CAN, T20 World Cup 2024
இதே போன்று 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
IND vs CAN, T20 World Cup 2024
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.