11 வயதில் தந்தையை இழந்தேன்.. சிங்கப்பெண்ணாக வளர்த்த தாய் - விஜய் டிவி பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
Priyanka deshpande : விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தன் தந்தையின் மறைவு குறித்து முதன்முறையாக பேசி உள்ளார்.
vijay tv Priyanka
விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கியதில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். ஜூனியர், சீனியர் என இரண்டு சீசன்களையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதுவும் இவரும், மாகாபா-வும் சேர்ந்தால் அலப்பறைக்கு பஞ்சமே இருக்காது என சொல்லும் அளவுக்கு இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் வேறலெவல் ஹிட் ஆகின.
Super singer sanu mithra
அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 9-வது சீசனை பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள சனு மித்ரா என்கிற சிறுமி, தன் தந்தையை இழந்த கதையை பகிர்ந்துகொண்டார். அந்த சிறுமியை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அழைத்து வந்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது தன் தந்தை விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக சனு மித்ரா கூறியதை கேட்டு அனைவரும் மனமுடைந்து அழுதனர்.
இதையும் படியுங்கள்... அரவிந்த் சாமி என்னோட புள்ள தான்... பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன் - மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர்
Super singer sanu mithra and Priyanka
பின்னர் அவரை ஆறுதல் படுத்திய பிரியங்கா, தன்னுடைய தந்தையை தான் 11 வயதில் இழந்துவிட்டதாக கூறினார். தனக்கு 11 வயது இருக்கும்போது தன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்துவிட்டதாகவும், அதன் பின்னர் தனது தாய் தான் தந்தையைப் போல் தன்னையும், தனது சகோதரரையும் பார்த்துக் கொண்டார் எனக்கூறி கதறி அழுதார். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் பிரியங்கா கண்ணீர் சிந்தியதை பார்த்து அனைவரும் எமோஷனல் ஆகினர்.
Thaman, Super singer sanu mithra
இதையடுத்து அந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் தமன், தான் 9 வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதாகவும், ரயிலில் செல்லும்போது மாரடைப்பு வந்து தன் தந்தை இறந்துவிட்டதாகவும் கூறிய தமன், நாங்கள் அனைவரும் உன்னுடன் இருக்கிறோம், எதற்கும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என சிறுமி சனு மித்ராவுக்கு ஆறுதல் கூறினார். இப்படி அனைவரும் தந்தையை பற்றி பேசியதை அடுத்து பாடகர் ஆண்டனி தாசன் தந்தை குறித்த ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் நெகிழ வைத்தார்.
இதையும் படியுங்கள்... ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? இவ்ளோ நாளா எங்க மாஸ்டர் ஒளிச்சி வச்சிருந்தீங்க!