அரவிந்த் சாமி என்னோட புள்ள தான்... பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன் - மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர்
Aravind Swamy father delhi kumar : தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அரவிந்த் சாமியை தத்துக்கொடுத்தது ஏன் என்பது குறித்து அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
Aravind Swamy
90-களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் தான் அரவிந்த் சாமி. இவரைப் போல தான் மாப்பிள்ளை வேண்டும் என அந்த காலத்து பெண்கள் அடம்பிடிக்கும் அளவுக்கு செம்ம அழகான ஹீரோவாக வலம் வந்தார் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர், முதல் படத்திலேயே ரஜினி, மம்முட்டி போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு இணையாக நடித்து அனைவரையும் அசர வைத்தார்.
Actor aravind swamy
அடுத்த ஆண்டே மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த் சாமி. இப்படம் வேறலெவல் ஹிட் அடித்தது. அதன்பின்னர் பாம்பே, இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே என தொடர்ந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அரவிந்த் சாமி, விபத்து ஒன்றில் சிக்கியதால் சினிமாவை விட்டு விலகினார். அதிலிருந்து மீண்டு வர சில ஆண்டுகள் ஆனது. அந்த சமயத்தில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போனார்.
aravind swamy father
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அரவிந்த் சாமி, பின்னர் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து இவர் வில்லனாக நடித்த தனி ஒருவன் திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. அப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்கிற ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் ரீச் ஆனது.
இதையும் படியுங்கள்... ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? இவ்ளோ நாளா எங்க மாஸ்டர் ஒளிச்சி வச்சிருந்தீங்க!
Delhi kumar
தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வில்லன் நடிகராக கலக்கி வருகிறார் அரவிந்த் சாமி. இவர் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சமயத்திலேயே இவர் சீரியல் நடிகர் டெல்லி குமார் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்து அரவிந்த் சாமியோ, டெல்லி குமாரோ எந்த இடத்திலும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அரவிந்த் சாமி குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.
Aravind swamy father Delhi kumar
அதில், அரவிந்த் சாமி தன்னுடைய மகன் தான் என்று கூறியுள்ள டெல்லி குமார், அவர் பிறந்த உடனே தன்னுடைய அக்காவுக்கு தத்துக் கொடுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி என்றால் மட்டும் அதில் அரவிந்த் சாமி கலந்துகொள்வார் என்றும் இதன் காரணமாக அவரை அடிக்கடி பார்க்க முடியாமல் போனதாகவும் டெல்லி குமார் கூறி உள்ளார். மேலும் அரவிந்த் சாமியோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் அவர் அதில் கூறி இருக்கிறார். நடிகர் டெல்லி குமார் மெட்டி ஒலி, பாண்டவர் இல்லம் உள்பட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Cinema News Tamil : 31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா!