MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் டிவியில் உருவான மீண்டும் புது ஒரு காதல் ஜோடி? கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு... வைரலாகும் போட்டோஸ்!

விஜய் டிவியில் உருவான மீண்டும் புது ஒரு காதல் ஜோடி? கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு... வைரலாகும் போட்டோஸ்!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏற்கனவே இணைந்து நடித்த ஜோடிகள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இதுகுறித்து அண்மையில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 16 2024, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

விஜய் தொலைக்காட்சியில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி... 2017ஆம் ஆண்டு, துவங்கப்பட்ட சீரியல் 'மௌனராகம்'.  திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இந்த தொடர் இசை குடும்பக் கதை பின்னணியாக கொண்டு ஒளிபரப்பானது.

29

இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'போட்டால் குமார் கான்வலா' எனும் தொடரின் ரீமேக் ஆகும். இந்த தொடரை, இயக்குனர் தாய் செல்வம் இயக்க, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்திருந்தனர். 

Actor Dwarakish Death: ரஜினி படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

39

இரண்டு பாகமாக ஒளிபரப்பான இந்த தொடர் கொரோனா தொற்று சமயத்தில், ஷூட்டிங் எதுவும் நடைபெறாத காரணத்தால், மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

49

பின்னர் ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கியது.

Dhanush Vs Aishwarya Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.!

59

அப்பா யார் என்பதை அறியாமல் வளரும் சக்தி, ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தை யார் என்பதை அறிந்து கொள்கிறார். எனினும், தன்னுடைய கணவரின் இரண்டாவது மனைவியால் குழந்தைக்கு ஆபத்து நேரும் என்பதால் சக்தியோடு கண்காணாத இடத்திற்கு செல்கிறார் மல்லிகா.

69

விதி வலியது என்பது போல் சக்தி படிக்கும் இசை கல்லூரியில் பேராசிரியராக அவரின் தந்தை பணியாற்ற... பல சாதித்திட்டங்களை கடந்து, அப்பாவுடன் அம்மாவை சக்தி எப்படி சேர்த்து வைக்கிறார் என்பதே இந்த சீரியலின் மைய கதை .

Priya Bhavani Shankar: வெள்ளை நிற சேலையில்... சைடு போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்! நயன்தாரா போல இருக்காங்களே

79

அதே போல் அம்மாவின் மருத்துவ செலவுக்காக, தன்னுடைய காதலனின் அண்ணனையே திருமணம் செய்து கொள்கிறார் சக்தி. சத்தியை கணவனிடம் நெருங்க விடாமல் நடக்கும் சதிகளை எப்படி சக்தி முறியடிக்கிறார் என்பதையும் மிகவும் சுவாரஸ்யமாக கூறி இருந்தார்.

89

இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தில் ரவீனா தாஹா, ஷெரின், சல்மான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்த கையேடு, ரவீனா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், தற்போது டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். மற்ற சீரியல் நடிகர்கள், அடுத்தடுத்த புராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில்... இந்த சீரியலில் நடித்த ஷெரின் மற்றும் சல்மான் இருவரும் எங்கேஜ்மெண்ட் என்கிற தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்கள்.

அழகில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்.. அருண் விஜய் அக்காவுக்கு வயசே ஆகாதா..

99

இந்த சீரீஸுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றில் சல்மான் மற்றும் ஷெரின் இருவரும் படு ரொமான்டிக்காக, மணமகன் - மணமகள் கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளதை பார்த்து உங்கள் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த ரீல் பேர், ரியல் பேராக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் சல்மான், தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள, 'ஆடுகளம்' என்கிற தொடரில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved