Aranthangi Nisha : தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் தொடங்கிய அறந்தாங்கி நிஷா - குவியும் வாழ்த்துக்கள்
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
aranthangi nisha
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அதில் தன்னுடைய ஸ்டாண்ட் அப் காமெடியால் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்து பேமஸ் ஆனவர் அறந்தாங்கி நிஷா. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கிய நிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நிஷா கலந்துகொண்டார்.
Vijay TV aranthangi nisha
அந்த சீசனில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட அன்பு கேங்கில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவிலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் அறந்தாங்கி நிஷா, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் அவ்வபோது செய்து வருகிறார் அறந்தாங்கி நிஷா. அண்மையில் சென்னையில் வெள்ளம் வந்தபோது இவர் ஓடோடி சென்று உதவியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் மதுமிதாவா இது? கவர்ச்சியில் புகுந்து விளையாடுறாங்களே!
KPY aranthangi nisha
இப்படி உதவிகளை செய்யும் நல் உள்ளம் கொண்டவராக அறந்தாங்கி நிஷா இருந்தாலும் அவர் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அண்மையில் அவர் சென்னை வெள்ளத்தில் ஓடி ஓடி உதவியதை பார்த்த சிலர் அவர் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்வதாக கொச்சைப்படுத்தி பேசினர். ஆனால் அதையெல்லாம் கண்டு துவண்டுவிடாத அறந்தாங்கி நிஷா, தான் தொடர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன் என தில்லாக பதிலடி கொடுத்தார்.
aranthangi nisha New Business
இந்த நிலையில். தமிழ் புத்தாண்டு தினமான இன்று அறந்தாங்கி நிஷா புது தொழில் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் அறந்தாங்கியில் தன்னுடைய வீட்டின் அருகிலேயே நிஷா பேஷன்ஸ் என்கிற துணிக்கடை ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் என்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் என் கூடவே இருந்த என் உறவுகளுக்கு நன்றி என தெரிவித்ததோடு, என்னுடைய புது முயற்சியான நிஷா பேஷனுக்கு ஆதரவளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார் நிஷா. அவரின் இந்த புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு