Vetrilai Pariharam : வெற்றிலையில் இந்த பரிகாரத்தை செய்ங்க.. நீங்க பணக்காரர் ஆகலாம்!
வெற்றிலையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

இந்து மதத்தில், தெய்வங்களுக்கு அலங்காரம், பிரசாதம் போன்ற அனைத்து விஷயங்களும் மனிதர்களின் நலனுடன் தொடர்புடையது. அந்தவகையில், தெய்வ வழிபாட்டில் பயன்படுத்தப்படும் வெற்றிலையானது, உங்களது அனைத்து வகையான பிரச்சனைகளையும் நீக்கி, விருப்பங்களையும் நிறைவேற்றும். வெற்றிலையின் அந்த அதிசய தந்திரங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
முரண்பாடு மற்றும் பதற்றத்தை அகற்ற: வீட்டில் பதற்றம் ஏற்பட்டாலோ, குடும்ப உறுப்பினர்கள் தினமும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டாலோ வெற்றிலையைப் பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும். இதற்கு, வீட்டின் நுழைவாயிலை நீரால் சுத்தம் செய்து, வெற்றிலையை தொங்கவிடுங்கள். இப்படி செய்வதன் மூலம், நிச்சயமாக வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவும். முக்கியமாக, இந்த இலை காய்ந்த பிறகு, தினமும் இலைகளை மாற்றுங்கள்.
இதையும் படிங்க: வெற்றிலையை 'இப்படி' பத்திரமாக வையுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
தீய கண்ணைத் தடுக்க: உங்கள் மீது (அ) உங்கள் வீட்டின் மீது தீய கண்கள் இருந்தால், அதை வெற்றிலை மூலம், அகற்றலாம். இதற்கு, ஏழு ரோஜா இதழ்களை வெற்றிலையில் வைத்து வீட்டின் தலைவிற்கோ அல்லது கண்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ ஊட்டினால் கண் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதையும் படிங்க: Betel Leaf : வெற்றிலை புற்றுநோய் வராமல் தடுக்குமா..? உண்மையை ஆராயலாம் வாங்க!
எல்லா விதமான தடைகளும் நீங்க: நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானின் கோவிலுக்குச் சென்று, வெற்றிலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தர்ப்பணம் செய்தால், நிச்சயம் தடைகள் நீங்கி காரியம் நிறைவேறும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D