MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல்.. குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!

லாரி மீது கார் நேருக்கு நேர் மோதல்.. குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!

லாரி மீது  கார் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 10 2023, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பரெய்லி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி எதிர்த்திசையில் உள்ள சாலையில் சென்று லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

23

மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்ததால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டதால் ஒரு குழந்தை உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

33

இதனையடுத்து காருக்குள் 8 பேரின் உடல்களும் கருகி கிடந்தன. பின்னர் அவரது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பஹாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved