AK 61 படத்தின் அடுத்தடுத்து வெளியான அப்டேட் ..! ஸ்டைலான லுக்கில் அஜித்... குஷி மோடில் ரசிகர்கள்...
AK 61 Update: வலிமை படத்திற்கு பிறகு அஜித், எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் ஹைதெராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Ajith
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில், கடந்த பிப்ரவரி 24 இம் தேதி வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சுமார் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வசூலில் 200 கோடி வெற்றியை தொட்டு சாதனை படைத்தது.
Ajith61
போனி கபூர் தயாரிப்பில் உருவான வலிமை படத்தில், அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பெரிதளவில் ஈர்க்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், போனி கபூர், எச்.வினோத் மற்றும் அஜித் AK61 படத்தில் இணைத்துள்ளனர்.
Ajith61
இதன் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Ajith61
இப்படத்திற்காக அஜித் புதிய லுக் மற்றும் தனது உடல் எடையில் 25 கிலோ குறைவுள்ளார் என்று தகவல் வெளியானது.
Ajith61
தற்போது, புதிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. அதாவது, நடிகர் அஜித் பல ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Ajith61
இது ஐதராபாத்தில் பட மாக்கப்பட்டு வருகிறது, மற்றொரு கதாபாத்திரத்தில் அஜித்தை ஹீரோவாக ஸ்டைலான லுக்கில் பார்க்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
Ajith61
மேலும் இப்படத்தில் இரட்டை கதாநாயகிகள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று தபு மற்றொன்று ரகுல் பீர்த்தி சிங் ஆவார். இந்நிலையில், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அஜித் சைக்கிள் அல்லது பைக்கில் வந்து விடுகிறாராம்.