அக்கா மேல் ரொம்ப பாசம்.. ஆனா அவர் மறைவுக்கு கூட வரல? ஸ்ரீதேவியின் தங்கையை பார்துருகீங்களா?
Actress Sridevi Sister : கோலிவுட் மற்றும் பாலிவுட் என்று கொடிகட்டி பறந்த நடிகை தான் ஸ்ரீதேவி. கடந்த 2018ம் ஆண்டு இவர் காலமானார்.
Veteran Actress Sridevi
கடந்த 1967-ம் ஆண்டு தமிழில் வெளியான "கந்தன் கருணை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாகவே பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஸ்ரீதேவி, கடந்த 1977ம் ஆண்டு வெளியான "16 வயதினிலே" திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
ஆசை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க தேடி பிடிக்கப்பட்ட புதுமுகம் தான் சுவலட்சுமி!
Sridevi Sister Srilatha
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என்று ஐந்து முக்கிய மொழிகளில் மிகவும் பிஸியாக வளம் வந்த ஸ்ரீதேவிக்கு, வலதுகரமாக இருந்து செயல்பட்டது அவருடைய சகோதரி ஸ்ரீலதா யாங்கர் தான். தனது சகோதரியுடன் திரைப்பட சூட்டிங்கிற்கு செல்லும் அவர், அவருடைய அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார், ஒரு கட்டத்தில் அவருடைய மேலாளராகவே ஸ்ரீலதா மாறினார்.
srilatha Sridevi sister
நடிகையாக வேண்டும் என்கின்ற ஆசியோடு வலம்வந்த ஸ்ரீலதா, அதற்கான முயற்சிகளை பெரிய அளவில் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது இருந்த ஆசையும் அவருக்கு நீங்க, தொடர்ச்சியாக தனது சகோதரி ஸ்ரீதேவியுடன் அவர் பயணித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஸ்ரீதேவியின் தாய் மரணித்த பிறகு அவர்களுக்கு இடையே மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது.
Southindian queen sridevi
கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீதேவி மறைந்த போது கூட, அவருடைய இரங்கல் கூட்டத்திற்கு ஸ்ரீலதா வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை.