வரும் மக்களவைத் தேர்தலில் டிடிவி. தினகரன் போட்டியா? எந்த தொகுதியில்? அவரே சொன்ன தகவல்..!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்கும் வரை மேலும் அழிவுகளை சந்திக்கும். ஜனநாயக ரீதியாக அதிமுகவில் உள்ளவர்கள் இரட்டை இலை சின்னத்துக்காக பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.
Parliament Election
திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்: வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு நானே அறிவிப்பேன். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி. விடியல் என்பது அவர்களது குடும்பத்துக்கு மட்டும்தானே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், தமிழகத்திலுள்ள மக்கள் திமுக ஆட்சி மீது கடுங்கோபத்தில் உள்ளனர். இதற்கான முடிவு வருகின்ற தேர்தல்களில் எதிரொலிக்கும்.
Edappadi Palanisamy
எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக அமர்த்தியவருக்கு துரோகம், ஆட்சிக்கு பிரச்சனை வந்தபோது அதை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், 4ஆண்டுகளாக ஆட்சித் தொடருவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம், உடன் இருப்பவர்களுக்கு துரோகம், தொண்டர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம். இப்படி துரோகம் செய்து வந்த, செய்து வருகிற எடப்பாடி பழனிசாமியை யாரும் நம்ப மாட்டார்கள். அதுதான் உண்மை.
இதையும் படிங்க;- வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கட்டுப்படுத்த வேண்டும் - கே.பி.முனுசாமி
TTV Dhinakaran
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்கும் வரை மேலும் அழிவுகளை சந்திக்கும். ஜனநாயக ரீதியாக அதிமுகவில் உள்ளவர்கள் இரட்டை இலை சின்னத்துக்காக பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பழனிசாமியின் உண்மை சுயரூபம் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இதை உணர்ந்த பிறகு நாங்கள் ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்றுவோம்.
இதையும் படிங்க;- உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்? ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் டிடிவி.!
india alliance party
இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகள் பிரிந்து போயிருக்கின்றன. கடைசியாக, மத்தியில் ஆள்பவர்களுக்கு பயந்து, காங்கிரஸ் கட்சியை கைகழுவி விட்டு, ஸ்டாலின் தனித்துத்தான் போட்டியிடுவார் என தெரிவித்தார். இபிஎஸ்வுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.