அரவிந்த் சாமி முதல் அருண் விஜய் வரை.. ஸ்வீட் சாக்லேட் பாய்ஸ் தான் - ஆனாலும் கிசுகிசுவில் சிக்காத Top 3 Heroes!
Chocolate Boys of Kollywood : கோலிவுட் உலகில் அன்றைய காலம்தொட்டே ரசிகைகள் மனம் கவர்ந்த நாயகர்கள் பலர் தொடர்ச்சியாக சாக்லேட் பாயாக வலம்வந்துகொண்டு இருக்கின்றனர்.
aravind samy
அரவிந்த் சாமி.. 1990களின் துவக்கத்தில் தனது அழகான தோற்றதால் மட்டுமல்லாமல் மிகசிறந்த நடிப்பால் ரசிகர், ரசிகைகளை கவர்ந்த நடிகர் தான் அரவிந்த் சாமி. தளபதி, ரோஜா, பம்பாய், இந்திரா மற்றும் மின்சார கனவு என்று தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. பெண்கள் மத்தியில் கனவு நாயகனாக திகழ்ந்த அவர் தனது திரையுலக வாழ்க்கையில் பெரிதாக எந்தவித கிசுகிசுவில் சிக்கியதே இல்லை.
madhavan
அலைபாயுதே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட ஒரு நடிகர் தான் மாதவன். உண்மையில் 1990களின் இறுதியில் இருந்து பல ஆண்டுகள் சாக்லேட் பாய் என்ற பட்டத்தை தன்வசம் வைத்திருந்த ஒரு நடிகர் அவர். இப்போது பல ஹார்டான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தாலும் இப்பொது அவர் சாக்லேட் பாய், புகழின் உச்சில் இருந்துவரும்போதும் மாதவன் எந்தவித கிசுகிசுவிலும் சிக்கியதில்லை.
arun vijay
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் தான் அருண் விஜய். ஆரம்பத்தில் பெரிய அளவில் இவருடைய நடிப்பு பாராட்டப்படவில்லை என்றே கூறலாம். 2012ம் ஆண்டுக்கு பிறகு 3 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார், ஆனால் அதன்பிறகு தனது இரண்டாவது இன்னிஸில் தற்போது கலக்கி வருகின்றார். அருண் விஜயும் தனது 29 ஆண்டு திரைவாழ்க்கையில் கிசுகிசுவில் சிக்கியதே இல்லை.