இந்தியாவின் முதல் 10 பல்கலைக்கழகங்கள்: முதல் இடம் பிடித்த பல்கலைக்கழகம் எது தெரியுமா?
இந்தியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்கள் எவை என்று தெரியுமா? இந்தத் தரவரிசையில் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன. எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இந்த லிஸ்டில் வருகின்றன என்று பார்ப்போம்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (National Institutional Ranking Framework) இந்தியாவின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை எவை என்று பார்ப்போம்.
இந்திய அறிவியல் கழகம் (கர்நாடகா)
இந்தப் பல்கலைக்கழகம் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் அமைந்துள்ளது. விண்வெளி, வேதியியல், சிவில், கணினி அறிவியல், மின் பொறியியல் மற்றும் பல படிப்புகளை வழங்குகிறது. நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக உள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (புது டெல்லி)
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பல சர்ச்சைகளுக்கு மட்டுமின்றி, சிறந்த கல்விக்கும் பெயர் பெற்றது. இப்பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி மாணவர் அமைப்புகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர். வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பைத் தொடர விரும்புவோருக்கு சிறந்த இடம் இந்த பல்கலைக்கழகம்
ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (புது டெல்லி)
ஜாமியா மிலியா இஸ்லாமியா என்பது தேசிய தலைநகர் புது தில்லியில் உள்ள மற்றொரு பிரபலமான பல்கலைக்கழகமாகும். இளங்கலை, முதுகலை, பிஎச்டி உட்பட பல்வேறு நிலைகளில் மொத்தம் 256 படிப்புகளை பல்கலைக்கழகம் வழங்குகிறது.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (கொல்கத்தா)
மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் NIRF தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தப் பல்கலைக்கழகம் சுமார் 147 படிப்புகளை வழங்குகிறது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (வாரணாசி)
பழமையான நகரமான வாரணாசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். 1916ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவால் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
மணிப்பால் பல்கலைக்கழகம் (கர்நாடகா)
தரவரிசையில் இரண்டு கர்நாடக பல்கலைக்கழகங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன. ஒன்று இந்திய அறிவியல் நிறுவனம். மற்றொன்று மணிப்பால் பல்கலைக்கழகம்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்யாபீத், வேலூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை முறையே 7 மற்றும் 8வது இடங்களைப் பிடித்துள்ளன. உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 9வது இடத்தையும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம 10வது இடத்தையும் பெற்றுள்ளன.