- Home
- Gallery
- Anant Ambani-Radhika Merchant: உலகளவில் நடந்த பிரம்மாண்ட திருமணங்கள் பட்டியலில் இவங்கதான் டாப்; யாரு தெரியுமா?
Anant Ambani-Radhika Merchant: உலகளவில் நடந்த பிரம்மாண்ட திருமணங்கள் பட்டியலில் இவங்கதான் டாப்; யாரு தெரியுமா?
Anant Ambani and Radhika Merchant's wedding | உலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருப்பது ஆனந்த் - ராதிகா திருமணம் பற்றிதான். சுமார் 9000 கோடி செலவில் இந்த பிரம்மாண்ட திருமணம் நடைபெற்றுள்ளது. மாபெரும் செலவில் நடைபெற்ற திருமணத்தில் இதுவே முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற டாப் 10 செலவில் நடைபெற்ற திருமணங்களை இங்கே காணலாம்.

ஆனந்த் அம்பானி & ராதிகா மெர்சன்ட்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் ஆசியாவின் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. ஆனந்த் அம்பானிக்கும் அவரின் நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த 12-ம் தேதி கோலாகலமாக மும்பையில் திருமணம் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள், தென்னிந்திய பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மாதங்களாக நடைபெற்று வரும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 9000 கோடி செலவி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹிந் பின்ட் பின் முக்தும் & ஷேக் மொஹமத் பின் ரஷித் அல் முக்தும்
1979ல் துபாயில் நடைபெற்ற ராயல் வெட்டிங் இது. ஷேக் மொஹமத் - ஷேக் ஹிந்த் திருமணம் ஒரு வார காலம் பல்வேறு விதவிதமாக நிகழ்ச்சிநிரல்களுடன் நடைபெற்றது. பிரத்தியேகமான அமைக்கப்பட்ட திருமண மண்டபம், பெரும் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், நகைகள் அணிந்து நடனமாடிய ஒட்டகங்கள் என சுமார் 1050 கோடி செலவு செய்யப்பட்டது.
சந்தினி ராய் & சீமந்தோ ராய் | ரிச்சா ராய் & சுஷாந்தோ ராய்
சஹாரா குழுமத்தின் தலைவர் சுபர்தோ ராய், 2004ம் ஆண்டு தனது இரு மகன்களுக்கும் சுமார் 1000 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார். 6 நாட்கள் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலிருந்தும் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
லேடி டயானா ஸ்பென்சர் & பிரின்ஸ் சார்லஸ்
இது ஒரு ராஜாங்க திருமணம் என்றே கூறலாம். லேடி டயானா - பிரின்ஸ் சார்லஸ் திருமணம் 1981ம் ஆண்டு புனித பால் கத்தீட்ரல் தேவாலயத்தில் மரபு சார்ந்து நடைபெற்றது. உலகத்தையை கட்டி ஈர்த்த இத்திருமணத்தை 750 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டுகளித்தனர். இந்த ராயல் கிராண்ட் வெட்டிங்கிற்காக சுமார் 950 கோடி செலானதாக அறியப்படுகிறது.
இஷா அம்பானி & ஆனந்த் பிரமல்
ரிலையன்ஸ் குழுமத்தின் பெண் வாரிசான இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2028ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமண முன் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக அம்பானி வீடான அன்டாலியாவில் படுவிமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பெரும் தொழிலதிபர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமணம் சுமார் 830 கோடி செலவில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் ரெட்டி & பிராஃமணி ஜனார்தன ரெட்டி
பிராஃமணி ஜனார்தன ரெட்டி, ராஜீவ் ரெட்டி திருமணம் கடந்த 2016ம் ஆண்டு, பெங்களூரு அரண்மனையில் நடைபெற்றது. டிமானிடைசேஷன் அறிவிக்கப்பட்ட இட்கட்டான காலகட்டத்தில் நடைபெற்ற இதுதிருமணத்தில் சுமார் 585 கோடி செலவில் நடைபெற்றது. உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 50,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். திருமண பாதுகாப்புக்கு மட்டுமே சுமார் 2.3 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வனிஷா மிட்டல் & அமித் ஃபாட்டியா
தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் கடந்த 2004ம் ஆண்டு அமித் ஃபாட்டியாவை கரம் பிடித்தார். 6 நாட்கள் நடைபெற்ற இந்த திருமணம் சுமார் 575 கோடி செலவில் கோலாகலமாக நடைபெற்றது. பிரெஞ்சு நாட்டில் நடைபெற்ற இத்திருமணத்தில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 1000 விவிஐபி-க்கள் கலந்துகொண்டனர்.