பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் குட்நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
School Student
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை மக்களவை தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜுன் 1ம் தேதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
School Education Department
ஆனால், மக்கள் தேர்தல் முடிவு மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: School Student: தனியார் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
School Holiday
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.