Today Gold Rate In Chennai: மாதத்தின் முதல் நாள்! தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
தங்கம் விலையில் கடந்த இரண்டு நாட்களாகக் காணப்பட்ட சரிவு இன்று தொடரவில்லை. நேற்றைய விலையே இன்றும் நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.53,560-க்கும், கிராம் ரூ.6,695-க்கும் விற்பனையாகிறது.
Gold Rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 01) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமும் ரூ.6,695-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.