- Home
- Gallery
- Today Gold Rate in Chennai : நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! சரசரெவன குறையும் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
Today Gold Rate in Chennai : நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! சரசரெவன குறையும் தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனையானது.
இன்றைய (நவம்பர் 09) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,085ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,680ஆக விற்பனையாகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.