Today Gold Rate In Chennai: இன்றைய தங்கம் விலையில் என்ன மாற்றம்? உயர்ந்ததா? குறைந்ததா?
தமிழ்நாட்டில் இன்றைய தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான சவரனுக்கு ரூ.52,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை சற்று உயர்ந்து கிராம் ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Gold Rate
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.52,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,555-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஆகஸ்ட் 15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சவரன் ரூ.52,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,555-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,010-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,080-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.