வீட்டில் எலிகள் அட்டூழியம் பண்ணுதா? உங்களுக்காக நச்சுனு நாலு டிப்ஸ் இதோ!
Rats Problem In House : வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை விரட்ட சில டிப்ஸ்கள் இங்கே உள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் அங்கும் இங்கும் அலையும் எலிகளை சுலபமாக விரட்டி விடலாம். அவை..
நீங்கள் உங்கள் வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், எலிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? ஆண்களில் இந்த பதிவு உங்களுக்காக மட்டுமே. எலி வீட்டின் சமையலறை மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் அட்டூழியம் செய்யும்.
அதுமட்டுமின்றி, இது வீட்டில் இருக்கும் சோபாக்கள், வயர், துணிகள் போன்ற பொருட்களை சேதப்படுத்திவிடும். மேலும் எலிகள் வீட்டிற்குள் வருவது நோய்களின் தொற்று பரவ வாய்ப்பு உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாகி விட்டால், மருந்துகள் இல்லாமலோ அல்லது அவற்றை கொல்லாமலோ எலிகளை சுலபமாக வீட்டிலிருந்து வெளியேற்ற, உங்களுக்காக சில டிப்ஸ்களை கொண்டு வந்துள்ளோம். இந்த டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் அங்கும் இங்கும் அலையும் எலிகளை சுலபமாக விரட்டி விடலாம். அவை..
பெப்பர் ஸ்ப்ரே: வீட்டில் இருக்கும் எலிகளை விரட்ட விரும்பினால் பெப்பர் ஸ்ப்ரேயை பயன்படுத்துங்கள். எலிகளுக்கு அதன் வாசனை பிடிக்காது. உடனே அது வீட்டை விட்டு வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, எலிகள் வரும் இடத்தில் மிளகு பொடியை தூவி வைத்தாலும், எலிகள் வீட்டிற்குள் ஒருபோதும் வராது.
கற்பூரம்: கற்பூரத்தின் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. இந்த வாசனை எலிகள் சுவாசிப்பதை கடினமாகிவிடும். எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் எலிகளை விரட்ட வேண்டுமானால், வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மூலையிலும் கற்பூரத்தை வைக்கவும். இவ்வாறு செய்தால் எலிகள் தானாகவ வீட்டை விட்டு வெளியேறும்.
இதையும் படிங்க: Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!
படிகாரம்: படிகாரம் எலிகளின் எதிரி. இதன் வாசனை எலிகளுக்கு பிடிக்காது. எனவே, படிகாரப் பொடியை தண்ணீரில் கரைத்து அதை வீட்டில் எலிகள் இருக்கும் இடத்தில் தெளித்தால், அவை வீட்டை விட்டு நிரந்தரமாக ஓடிவிடும்
இதையும் படிங்க: Kitchen Tips : கரப்பான் பூச்சிகளை அடியோடு அழிக்க 'இத' மட்டும் செய்யுங்க.. கொத்து கொத்தாக செத்து மடியும்!
வெங்காயம் மற்றும் பூண்டு: வெங்காயம் மற்றும் பூண்டின் சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிறகு நன்றாக குலுக்கி வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளித்தால், அவற்றின் வாசனை பிடிக்காமல் எலிகள் வீட்டில் இருந்து ஓடிவிடும். அதுபோல, எலிகள் வரும் இடத்தில் இதை தெளித்தால் எலிகள் வீட்டிற்குள் ஒருபோதும் வரவே வராது.